மாநில செய்திகள்

சென்னை உள்பட 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை + "||" + 4 places including Chennai Sudden raid of National Intelligence Agency officials

சென்னை உள்பட 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை

சென்னை உள்பட 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை
சென்னையில் மண்ணடி மற்றும் புரசைவாக்கத்தில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை,

ஈஸ்டர் தினத்தன்று, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பானது இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலை நிகழ்த்தியது. இதில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகளுடன் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு உளவுத்துறை கூறி இருந்தது.

இதன்படி, கேரளாவிலும், தமிழகத்திலும் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பலரைக் கைது செய்தனர். பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொச்சியில் உள்ள அலுவலகத்தில் இருந்து இன்று சென்னை வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவானது, மண்ணடி லிங்கி செட்டி தெருவில் உள்ள இஸ்லாமிக் ஹிண்ட் என்ற அமைப்பின் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகிறது. இது போல் புரசைவாக்கத்தில் இஸ்லாமிய அமைப்பின்  மாநில தலைவர் முகமது புகாரி வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

அந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதேபோல் நாகப்பட்டினத்தில் மஞ்சகொல்லை, சிக்கல் ஆகிய இடங்களில் அசன் அலி, ஹாரீஸ் முகமது ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாட்டில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை
தமிழ்நாட்டில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
2. ராமலிங்கம் கொலை: திருச்சி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் என்ஐஏ சோதனை
திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
3. தஞ்சை, அதிராம்பட்டினம்,கும்பகோணம், ராமநாதபுரத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை
தஞ்சை, அதிராம்பட்டினம்,கும்பகோணம், ராமநாதபுரத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
4. ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு : தேசிய புலனாய்வு அமைப்பு 7 இடங்களில் சோதனை
ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு 7 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...