உலக செய்திகள்

மும்பையில் தீவிரவாத தாக்குதலில் எனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை - ஹபீஸ் சயீத் + "||" + ‘No role in 26/11 Mumbai attack’: Hafiz Saeed tells Pak court on terror charges

மும்பையில் தீவிரவாத தாக்குதலில் எனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை - ஹபீஸ் சயீத்

மும்பையில்  தீவிரவாத தாக்குதலில் எனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை - ஹபீஸ் சயீத்
மும்பையில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் தமக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் லாகூர் உயர் நீதிமன்றத்தில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்,

தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியாவின் தொடர்ந்த வலியுறுத்தலால் தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு உலகநாடுகளின் நெருக்குதல் அதிகமானது. இதையடுத்து சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்த ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் மும்பை தீவிரவாத தாக்குதலில் ஹபீஸ் சயீத்துக்கு உள்ள தொடர்பு குறித்த விசாரணையில், தமக்கும் அந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று ஹபீஸ் சையத் மறுத்துள்ளார். ஆனால் ஹபீஸ் சயீத் மீது பாகிஸ்தான் தொடர்ந்த வழக்குகள் தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியது போன்ற பிரிவுகளின் கீழ் உள்ளவையே என்றும் சர்வதேச சமூகத்தினரை ஏமாற்ற பாகிஸ்தான் கண்துடைப்பு நாடகமாடுவதாகவும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஹபீஸ் சயீத்தின் அன்றாட செலவுக்கு பணம் அனுமதிக்க வேண்டும் -ஐநாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை
சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத்திற்கு தேவையான அடிப்படை செலவுக்கு பணத்தை எடுக்க அனுமதிக்க வேண்டும் என ஐநா பாதுகாப்பு குழுவிடம் பாகிஸ்தான் கோரிக்கை வைத்து உள்ளது.
2. பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் கைது செய்திருப்பது மற்றொரு நாடகம் - இந்திய வெளியுறவுத்துறை
பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் கைது செய்திருப்பது மற்றொரு நாடகம் மட்டும்தான் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
3. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாக். ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
4. ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை என்பது பாகிஸ்தானின் வேஷம் -இந்தியா
ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுப்பது போன்று காட்டிக்கொள்வது பாகிஸ்தானின் வேஷம் என இந்தியா கூறியுள்ளது.
5. பயங்கரவாத செயல்களுக்கு நிதி: ஹஃபீஸ் சையத் மீது பாகிஸ்தான் 23 வழக்குகள் பதிவு
மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய ஹஃபீஸ் சையத் மீது பாகிஸ்தான் வழக்குப் பதிவு செய்துள்ளது.