மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் நீதித்துறை, பத்திரிகைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது- முதல்வர் பழனிசாமி + "||" + Justice Department in Tamil Nadu Journalism Operating independently- Chief Minister Palanisamy

தமிழ்நாட்டில் நீதித்துறை, பத்திரிகைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது- முதல்வர் பழனிசாமி

தமிழ்நாட்டில் நீதித்துறை, பத்திரிகைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது- முதல்வர் பழனிசாமி
தமிழ்நாட்டில் நீதித்துறை, பத்திரிகைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது என அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேசினார்.
சென்னை,

சென்னை தரமணியில் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தொடங்கியது. விழாவில் ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமாணி உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

விழாவில்  முனைவர் பட்டம் பெற்ற  3 பேருக்கும் ஜனாதிபதி  வாழ்த்து தெரிவித்தார்.

விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-

மனுநீதி சோழனை போல சிறப்பான தீர்ப்புகளை வழங்குபவர்கள் நீதிபதிகள். தமிழ்நாட்டில் நீதித்துறை, பத்திரிகைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. 

நீதிக்கு தலைவணங்கும் மாநிலம் தமிழகம்.  நீதிமன்றம், பத்திரிகை உள்ளிட்டவை சுதந்திரமாக செயல்படுகிறது. நீதி, நேர்மையை சிறப்பாக கடைபிடிக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.  சட்ட பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளை மேம்படுத்த உரிய நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 3 புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்- தி.மு.க. தான், எதிர்ப்பு எழுந்ததால் பழியை எங்கள் மீது போடுகிறார்கள் - மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
“நீட்” தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்- தி.மு.க. தான் என்றும், எதிர்ப்பு எழுந்ததால் எங்கள் மீது பழி போடுகிறார்கள் என்றும் மதுரையில் அளித்த பேட்டியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
2. ரூ.159 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
159 கோடி ரூபாய் மதிப்பிலான 500 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
3. அமைச்சர்களின் வீடுகளில் அதிகளவு தண்ணீர் என்பது தவறான தகவல் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அமைச்சர்களின் வீடுகளில் அதிகளவு தண்ணீர் என்பது தவறான தகவல் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
4. நீர்வளத்துறை அமைச்சருடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு; மேகதாது திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை
நீர்வளத்துறை அமைச்சரை முதல்வர் பழனிசாமி சந்தித்தார். அப்போது மேகதாது திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை வைத்தார்.
5. எட்டயபுரம் அரசு பெண்கள் பள்ளியில், ரூ.2.64 கோடி செலவில் புதிய வகுப்பறைகள் - ஆய்வகம்
எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.64 கோடி செலவில் கட்டப்பட்ட 19 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.