மாநில செய்திகள்

தீர்ப்புகளை அந்த அந்த மாநில மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிட வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் + "||" + The verdicts are in those state languages To be translated and published President Ramnath Govind

தீர்ப்புகளை அந்த அந்த மாநில மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிட வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

தீர்ப்புகளை அந்த அந்த மாநில மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிட வேண்டும் -  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
உயர்நீதிமன்றங்களில் வெளியாகும் தீர்ப்புகளை அந்த அந்த மாநில மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிட்டால் மக்களுக்கு எளிதில் சென்றடையும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.
சென்னை,

சென்னை தரமணியில் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தொடங்கியது. விழாவில் ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமாணி உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். விழாவில்  முனைவர் பட்டம் பெற்ற  3 பேருக்கும் ஜனாதிபதி  வாழ்த்து தெரிவித்தார்.

விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-

மனுநீதி சோழனை போல சிறப்பான தீர்ப்புகளை வழங்குபவர்கள் நீதிபதிகள். தமிழ்நாட்டில் நீதித்துறை, பத்திரிகைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. 

நீதிக்கு தலைவணங்கும் மாநிலம் தமிழகம். நீதிமன்றம், பத்திரிகை உள்ளிட்டவை சுதந்திரமாக செயல்படுகிறது. நீதி, நேர்மையை சிறப்பாக கடைபிடிக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.  சட்ட பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளை மேம்படுத்த உரிய நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 3 புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும் என கூறினார்.

விழாவில்  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசும் போது கூறியதாவது:-

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக திறம்பட செயல்பட்டவர் சதாசிவம்.

உயர்நீதிமன்றங்களில் வெளியாகும் தீர்ப்புகளை அந்த அந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டால் மக்களுக்கு எளிதில் சென்றடையும்.

கேரள உயர்நீதிமன்ற தீர்ப்புகளை மலையாளத்திலும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய விருப்பம்.

மக்களிடம் சட்டம் குறித்த அறிவை கொண்டு சேர்க்க வேண்டிய தேவை தற்போது இருக்கிறது. வசதி படைத்தவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் ஒரே மாதிரியான நீதியை வழங்கும் பணியை நீதித்துறை செய்ய வேண்டும் என கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...