மாநில செய்திகள்

செப்டம்பர் 15-க்குள்ளாக 9,10,11,12 ஆம் வகுப்புகள் கணினிமயமாக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் + "||" + classes of 9,10,11,12 will be computerized by September 15 - Minister Senkotayan

செப்டம்பர் 15-க்குள்ளாக 9,10,11,12 ஆம் வகுப்புகள் கணினிமயமாக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

செப்டம்பர் 15-க்குள்ளாக 9,10,11,12 ஆம் வகுப்புகள் கணினிமயமாக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்
செப்டம்பர் 15-க்குள்ளாக 9,10,11,12 ஆம் வகுப்புகள் கணினிமயமாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சென்னை,

சென்னை அம்பத்தூரில் உள்ள காமராஜர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர்  அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2017 - 2018 கல்வியாண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு 3 மாதங்களுக்குள் மடிக்கணினி வழங்கப்படும்.  மாணவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெற 2000 சொற்றொடர்கள் கொண்ட மென்பொருள் வழங்கப்படவுள்ளது. இதுவரை 54 லட்சத்து 62 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தற்போதுள்ள +2 வகுப்பிற்கான பாடத்திட்டத்தின்படி நீட் தேர்வு மட்டுமல்லாது அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ள முடியும். 3 ஆண்டுகள் அவகாசம் இருந்த போதும், இரண்டே ஆண்டில் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டது. செப்டம்பர் 15-க்குள்ளாக 9,10,11,12 ஆம் வகுப்புகள் கணினிமயமாக்கப்படும் என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. 10,11,12ம் வகுப்புகளில் தோல்வியுற்ற மாணவர்கள் தேர்வை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம் - பள்ளிக்கல்வித்துறை
10,11,12ம் வகுப்புகளில் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தேர்வை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
2. உடற்கல்வி ஆசிரியர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
உடற்கல்வி ஆசிரியர்கள் ஒரு மணி நேரம் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
3. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு
10,11 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.
4. கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 3-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறப்பு : 7-ந் தேதி சீருடை வழங்கப்படும்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகிறது. 7-ந் தேதி சீருடை வழங்கப்படுகிறது.