கிரிக்கெட்

ரூ.4.5 கோடி மோசடி: கிரிக்கெட் வீரர் சேவாக்கின் மனைவி போலீசில் புகார் + "||" + Virender Sehwag’s wife Aarti accuses business partners of forging sign to take Rs 4.5 crore loan

ரூ.4.5 கோடி மோசடி: கிரிக்கெட் வீரர் சேவாக்கின் மனைவி போலீசில் புகார்

ரூ.4.5 கோடி மோசடி: கிரிக்கெட் வீரர் சேவாக்கின் மனைவி போலீசில் புகார்
தனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி ரூ.4.5 கோடி கடன் பெற்றதாக தனது தொழில் கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் மனைவி புகார் கொடுத்துள்ளார்.
மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக். இவரது மனைவி ஆர்த்தி. இவரது தொழில் கூட்டாளிகள், தனது கையெழுத்தை முறைகேடாகப் பயன்படுத்தி நிறுவனம் ஒன்றிடம் ரூ.4.5 கோடி கடன் பெற்றுள்ளார்கள் என்றும் அந்தப் பணத்தைத் திருப்பி கொடுக்காமல் தன்னை சிக்க வைத்துள்ளதாகவும் போலீசில் புகார் செய்துள்ளார்.

அவரது புகாரில், தனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தியும், கணவர் வீரேந்திர சேவாக்கின் பெயரை தவறாகப் பயன்படுத்தியும் இந்த கடன் வாங்கப்பட்டிருக்கிறது என்றும் இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது, அந்த கடனுக்காக முன்தேதியிட்டு வழங்கப்பட்ட காசோலைகளும் பணம் இல்லாமல் திரும்பி சென்றுள்ளன என்றும், இதனால் தன்னை இதில் சிக்க வைத்துள்ள தொழில் கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்த்தி கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.