மாநில செய்திகள்

சினிமா பாணியில் காரை துரத்தி பிடித்த போலீசார்; 180 கிலோ கஞ்சா பறிமுதல் + "||" + In cinematic style The police chasing the car 180 kg of cannabis seized

சினிமா பாணியில் காரை துரத்தி பிடித்த போலீசார்; 180 கிலோ கஞ்சா பறிமுதல்

சினிமா பாணியில் காரை துரத்தி பிடித்த போலீசார்; 180 கிலோ கஞ்சா பறிமுதல்
பெரம்பலூர் அருகே திருமாந்துறை டோல் பிளாசா பகுதியில் கஞ்சா கடத்திய காரை சினிமா பாணியில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு மடக்கினர்.
பெரம்பலூர்,

சென்னையில் இருந்து மதுரைக்கு  ஒரு கார் வேகமாக சென்று கொண்டு இருந்தது. பெரம்பலூர் அருகே திருமாந்துறை டோல் பிளாசா பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வேகமாக வந்த  காரை  போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. உடனடியாக அந்த காரை துரத்தி சென்ற போலீசார், அதை நிறுத்த டயர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்னர் காரில் கடத்தப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான 180 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக  2 பேரை போலீசார் கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கோவையில் இருந்து வெளிநாட்டுக்கு விமானத்தில் கஞ்சா கடத்த முயன்ற கேரள வாலிபர் கைது
கோவையில் இருந்து வெளிநாட்டுக்கு விமானத்தில் கஞ்சா கடத்த முயன்ற கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. கம்பத்தில் கஞ்சா கடத்தல், விற்பனை: ஒரே நாளில் சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது போலீசார் அதிரடி
கம்பத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக ஒரே நாளில் சிறுவர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. உளுந்தூர்பேட்டை அருகே, காரில் 120 கிலோ கஞ்சா கடத்தல், அண்ணன்-தம்பி கைது
உளுந்தூர்பேட்டை அருகே காரில் 120 கிலோ கஞ்சா கடத்திய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
4. சுங்குவார்சத்திரத்தில் இருந்து டெல்லிக்கு கஞ்சா கடத்தல்; 2 பேர் கைது
சுங்குவார்சத்திரத்தில் இருந்து டெல்லிக்கு கஞ்சா கடத்தியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...