தேசிய செய்திகள்

லடாக்கில் சீன வீரர்கள் அத்துமீறவில்லை : ராணுவ தளபதி + "||" + No Intrusion By Chinese Soldiers in Ladakh: Army Chief

லடாக்கில் சீன வீரர்கள் அத்துமீறவில்லை : ராணுவ தளபதி

லடாக்கில் சீன வீரர்கள் அத்துமீறவில்லை : ராணுவ தளபதி
லடாக்கில் சீன வீரர்கள் அத்துமீறவில்லை என்று இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக்கில் உள்ள டெம்சோ பகுதியில் சீன ராணுவ வீரர்கள் சிலர் கடந்த வாரம் அத்துமீறி நுழைந்ததாகவும் சிறிது நேரத்திலேயே அவர்கள் சீனப் பகுதிக்குள் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

கடந்த 6-ஆம் தேதி திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் பிறந்த தினத்தையொட்டி, லடாக் பகுதியில் உள்ள கிராமத்தில் திபெத் கொடியை அங்குள்ள திபெத்தியர்கள் சிலர் ஏற்றியதாகத் தெரிகிறது. இதையடுத்து, சீன ராணுவ வீரர்கள் தங்கள் வாகனத்தில் அப்பகுதிக்குள் நுழைந்தனர் என்று தகவல் வெளியானது. 

இந்த நிலையில், மேற்கண்ட தகவலை ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். ராணுவ தளபதி பிபின் ராவத் இது பற்றி கூறும்போது, “ சீன  படையினர் தங்கள் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி வழியாக ரோந்து சென்றனர்.  அப்போது, உள்ளூர் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

டெம்சோ செக்டாரில் உள்ள  திபெத்தியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது என்ன நடக்கிறது என்பதை சில சீனர்களும் காண வந்தனர். உண்மையில் எந்த அத்துமீறலும் நடைபெறவில்லை. அனைத்தும் இயல்பாகவே இருந்தது” இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை நிறைவு செய்த சீன தானியங்கி பேருந்து
சீனாவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி பேருந்து ஒன்று கத்தாரில் வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை நிறைவு செய்தது.
2. அமெரிக்கா-சீனா மீண்டும் வர்த்தக பேச்சு: டிரம்ப், ஜின்பிங் சந்திப்பில் முடிவு
அமெரிக்கா-சீனா மீண்டும் வர்த்தக பேச்சு நடத்த உள்ளதாக, டிரம்ப், ஜின்பிங் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது.
3. எத்தியோப்பியாவில் ராணுவ தளபதி சுட்டுக்கொலை - பிராந்திய ஆட்சித்தலைவரும் கொல்லப்பட்டார்
எத்தியோப்பியாவில் ராணுவ தளபதி சுட்டுக்கொல்லப்பட்டதுடன், பிராந்திய ஆட்சித்தலைவரும் கொல்லப்பட்டார்.
4. சீனாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 12 பேர் பலி
சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 12 பேர் பலியானார்கள். 122 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ளும் சீனர்கள்
பாகிஸ்தானில் பெண்களை திருமணம் செய்து சீனாவில் பாலியல் தொழிலுக்கு தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.