கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி : இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நியூசிலாந்து வீரர் உருக்கமான வேண்டுகோள் + "||" + Dear Indian cricket fans. please give all genuine cricket fans a chance to go, not just the wealthy- Jimmy Neesham

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி : இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நியூசிலாந்து வீரர் உருக்கமான வேண்டுகோள்

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி : இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நியூசிலாந்து  வீரர்  உருக்கமான வேண்டுகோள்
உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி தொடர்பாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நியூசிலாந்து வீரர் ஜிம்மி நிஷாம் உருக்கமான வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
லார்ட்ஸ்,

கடந்த புதன்கிழமை மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இரண்டு முறை உலகக் கோப்பை சாம்பியனான இந்தியாவை நியூசிலாந்து வென்றது. விராட் கோலி தலைமையிலான அணி 9 போட்டிகளில் ஒரு தோல்வியுடன் தொடர் முழுவதும் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, எனினும் கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியின் பந்துவீச்சு தாக்குதலுக்கு முன்னால் அது வலுவான அணியாக சோபிக்க முடியவில்லை.

இந்தியாவின் மிகவும் போட்டிகரமான பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் எதிர்பார்த்ததை விட விரைவில் களத்தில் இருந்து வெளியேறினர். இருப்பினும், ரவீந்திர ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்கள் குவித்து ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார். எனினும் ஜடேஜாவின் ஆட்டம் அன்று இந்தியாவிற்கு கைகொடுக்கவில்லை என்பதே உண்மை.

மறுபுறம், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது அரையிறுதி ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவுக்கு இதேபோன்ற விதி இருந்தது. ஈயோன் மோர்கன் தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கான தங்களது இடத்தை உறுதி செய்தது. இந்நிலையில் நாளை இவ்விரு அணிகளும் கோப்பைக்கான இறுதிபோட்டியில் களம் காணவுள்ளது.

இறுதி போட்டி நாளை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் இப்போட்டியை காண டிக்கெட்  வாங்கியுள்ள இந்திய ரசிகர்கள், தங்களது டிக்கெடை மறுவிற்பனை செய்யுமாறு ஜிம்மி நிஷாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... "அன்புள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களே. நீங்கள் இனியும் இறுதிப் போட்டிக்கு வர விரும்பவில்லை என்றால் தயவுசெய்து நீங்கள் பெற்றுள்ள இறுதி போட்டிக்கான நுழைவுச்சீட்டினை உலக கோப்பை கிரிக்கெட் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக உங்கள் டிக்கெட்டுகளை மறுவிற்பனை செய்யுங்கள். இது ஒரு பெரிய லாபத்தை ஈட்ட முயற்சிப்பதாக என எனக்குத் தெரியும், ஆனால் தயவுசெய்து அதனை உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள்." என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 'அவர் இப்போது என்ன செய்தார்? -ரவிசாஸ்திரி குறித்த கேள்விக்கு சவுரவ் கங்குலி வித்தியாசமான பதில்
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்வாகி உள்ள சவுரவ் கங்குலி நிருபர்கள் சந்திப்பின்போது ரவிசாஸ்திரி குறித்த கேள்விக்கு வித்தியாசமான பதிலளித்துள்ளார்.
2. தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை... தமிழில் ரசிகருக்குப் பதில் அளித்த மிதாலி ராஜ்
தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை... என்று ரசிகருக்கு ட்விட்டரில் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் தமிழில் பதில் அளித்துள்ளார்.
3. பிசிசிஐ தலைவர் கங்குலி, மேற்கு வங்காள மாநில பாஜக முதல்வர் வேட்பாளரா?
பிசிசிஐ தலைவர் கங்குலி பா.ஜனதாவில் சேர்கிறார் என்றும் அவர் மேற்கு வங்காள மாநில பாஜக முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளிவருகின்றன.
4. இந்திய கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் -பிசிசியின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி
இந்திய கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் என்று பிசிசியின் புதிய தலைவராக தேர்வான சவுரவ் கங்குலி கூறி உள்ளார்.
5. கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தலைவர் கபில் தேவ் ராஜினாமா!
கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்.