தேசிய செய்திகள்

கோவா: காங்கிரசிலிருந்து பாஜக-வுக்குத் தாவிய எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி + "||" + 3 Goa Congress Lawmakers Who Switched To BJP Will Be Made Ministers Today

கோவா: காங்கிரசிலிருந்து பாஜக-வுக்குத் தாவிய எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி

கோவா: காங்கிரசிலிருந்து பாஜக-வுக்குத் தாவிய எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி
கோவாவில் காங்கிரசிலிருந்து பாஜகவுக்குத் தாவிய எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
பானாஜி,

கோவா மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த 10 பேர், கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக-வுக்குத் தாவினர். இதில் 3 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான சந்திரகாந்த் காவ்லேகர், இன்று துணை முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதேபோல், “ஜெனிஃபர் மொன்செராட்டே, ஃபிலிப்பி நேரி ரோட்ரிகஸ் ஆகியோரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கோவா மாநிலத்தில் மொத்தம் 40 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தற்போது  அங்கு பாஜக-வுக்கு ஆதரவாக 27 பேர் உள்ளனர். 2017-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் தற்போது காங்கிரஸில் 5 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே உள்ளனர்.  இந்நிலையில், கட்சியில் இணைந்துள்ள 10 எம்.எல்.ஏ-க்களும் அவர்களின் சொந்த விருப்பத்தின்படியே வந்தனர் என்று பாஜக கூறி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கோவா விமானநிலைய ஓடுபாதையில் தீ
கோவா விமானநிலைய ஓடுபாதையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.
2. கோவாவில் மேயர் மீது மானபங்க வழக்கு பதிவு
கோவாவில் மேயர் மீது மானபங்க வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. ஜெயலலிதாவின் பாதையில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி விலகிவிட்டார் - ப.சிதம்பரம்
ஜெயலலிதாவின் பாதையில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி விலகிவிட்டார் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
4. கோவா துணை முதல்-மந்திரி நீக்கம்: மாநில அரசியலில் பரபரப்பு
கோவாவில் துணை முதல்-மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டது மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
5. கோவா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பிரமோத் சவாந்த் வெற்றி
கோவா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பிரமோத் சவாந்த் வெற்றி பெற்றார்.