தேசிய செய்திகள்

உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது: ராகுல் காந்திக்கு ராபர்ட் வத்ரா பாராட்டு + "||" + "Much To Learn From You": Robert Vadra Praises Rahul Gandhi On Facebook

உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது: ராகுல் காந்திக்கு ராபர்ட் வத்ரா பாராட்டு

உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது: ராகுல் காந்திக்கு ராபர்ட் வத்ரா பாராட்டு
உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயம் உள்ளது என்று ராகுல் காந்திக்கு ராபர்ட் வத்ரா பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

மக்களவை தேர்தலில் சந்தித்த படுதோல்வியை அடுத்து, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார்.  காங்கிரஸ் கட்சி கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வத்ரா, ராகுல் காந்தியை வெகுவாக பாராட்டி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். ராபர்ட் வத்ரா பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:- “ 

ராகுல் காந்தியிடம்  இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதம் இருக்கும் 45 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு மட்டுமின்றி மற்ற இளம் தலைவர்களுக்கும் நல்ல வழிகாட்டியாக வருகிறீர்கள். கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்துவதற்காக நீங்கள் எடுத்துள்ள முடிவு அனைவராலும் பாராட்டப்படுகிறது.”இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவுங்கள் கட்சி தொண்டர்களுக்கு ராகுல் காந்தி கோரிக்கை
வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவுங்கள் என கட்சி தொண்டர்களுக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
2. எதிர்க்கட்சி பணி மகிழ்ச்சி மற்றும் எளிமையானது: ராகுல் காந்தி பேச்சு; கட்சியினர் உற்சாகம்
எதிர்க்கட்சி பணி மகிழ்ச்சி நிறைந்தது மற்றும் எளிமையானது என ராகுல் காந்தி பேசியது கட்சியினரிடையே உற்சாகம் ஏற்படுத்தி உள்ளது.
3. ராகுல் காந்தியை டுவிட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியது
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை டுவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியது.
4. புதிய காங்கிரஸ் தலைவரை நியமனம் செய்ய பரிந்துரைகளை வழங்க ராகுல் காந்தி குழு அமைக்க வேண்டும் -ஜனார்த்தன் திரிவேதி
புதிய காங்கிரஸ் தலைவரை நியமனம் செய்ய பரிந்துரைகளை வழங்க ராகுல் காந்தி குழு அமைக்க வேண்டும் என ஜனார்த்தன் திரிவேதி கூறியுள்ளார்.
5. ராகுல் தலைவர் பதவியை ஏற்காதபட்சத்தில் அடுத்த தலைவர் பற்றி முடிவெடுக்கப்படும்; திருநாவுக்கரசர்
ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்காதபட்சத்தில் அடுத்த தலைவர் பற்றி முடிவெடுக்கப்படும் என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.