உலக செய்திகள்

பயனாளர்களின் தகவல் திருட்டு சர்ச்சை: பேஸ்புக் நிறுவனத்துக்கு பின்னடைவு + "||" + $5 Billion US Fine Set For Facebook On Privacy Probe: Report

பயனாளர்களின் தகவல் திருட்டு சர்ச்சை: பேஸ்புக் நிறுவனத்துக்கு பின்னடைவு

பயனாளர்களின் தகவல் திருட்டு சர்ச்சை: பேஸ்புக் நிறுவனத்துக்கு பின்னடைவு
பயனாளர்களின் தகவல் திருட்டு சர்ச்சையில் பேஸ்புக் நிறுவனத்துக்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தில் பிரபல சமூக  வலைதளமான பேஸ்புக்கிற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

உலகில் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் பேஸ்புக் முதலிடம் வகிக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அரசியல் விவகாரங்களை கவனிக்கும் கேம்ப்ரிட்ஜ் அனால்டிக்கா என்ற நிறுவனத்திற்கு தனது  பயனாளிகளின் தகவல்களை பேஸ்புக் அளித்ததாக புகார்கள் எழுந்தன.

இந்த நிறுவனம் கடந்த 2016-ல் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிபர்  வேட்பாளராக இருந்தபோது அவர் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக வேலை செய்தது. பயனாளிகளின் தகவல்கள் கிடைத்தால் அவர்களது எண்ண  ஓட்டங்களை அறிந்து, அதற்கேற்ப பிரசாரங்களை கேம்ப்ரிட்ஜ் நிறுவனத்தால் செய்ய முடியும்.

தகவல் திருடப்பட்ட விவகாரம் புயலைக் கிளப்பிய நிலையில், இதற்கு பேஸ்புக் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது. இதற்கிடையே இந்த பிரச்சினை குறித்து  அமெரிக்காவில் வர்த்தகங்களை ஒழுங்குபடுத்தும் மத்திய வர்த்தக ஆணையம்  விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில், பேஸ்புக்கிற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த விவகாரம் குறித்து பேஸ்புக் தரப்பில் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. வர்த்தக சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் இந்தியா மீதும் விசாரணை - அமெரிக்கா
இறக்குமதிகளுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்துவதற்கு முன்னோட்டமாக, வர்த்தக சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் இந்தியா மீதும் விசாரணை மேற்கொள்ளப்படலாம் என டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.
2. டிரம்ப் நிர்வாகத்தின் விதிமுறைக்கு, அமெரிக்க நீதிமன்றம் தடை
விலையுயர்ந்த மருந்துகளின் விலைகளை தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் பட்டியலிட அறிவுறுத்தும், டிரம்ப் நிர்வாகத்தின் விதிமுறைக்கு, அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
3. அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் வெள்ளம் புகுந்தது
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ளை மாளிகையின் கீழ்தளப் பகுதியிலும் மழைநீர் புகுந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
4. பயங்கர நில நடுக்கம்: குலுங்கியது அமெரிக்க மாகாணம் 'உயிர் பிழைப்பேன் என நினைக்கவில்லை' என்று இந்திய பெண் உருக்கம்
பயங்கர நில நடுக்கத்தால் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் குலுங்கியது. இதில் உயிர் பிழைப்பேன் என நினைக்கவில்லை என்று இந்திய வம்சாவளி பெண் ஒருவர் உருக்கமாக கூறினார்.
5. எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் -துருக்கிக்கு அமெரிக்கா எச்சரிக்கை
விரைவில் எஸ் 400 ரக ஏவுகணைகள் விரைவில் துருக்கியை சென்றடையும் என ரஷ்யா தெரிவித்துள்ளதை அடுத்து எதிர்மறையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க எச்சரித்துள்ளது.