மாநில செய்திகள்

நேர்மையின்றி பலர் பணம் சம்பாதிக்கின்றனர், அவர்களுக்கு மோடி சிறைகளை தயார் செய்கிறார் -வெங்கையா நாயுடு பேச்சு + "||" + Many people make money without honesty Modi is preparing prisons for them VenkaiahNaidu

நேர்மையின்றி பலர் பணம் சம்பாதிக்கின்றனர், அவர்களுக்கு மோடி சிறைகளை தயார் செய்கிறார் -வெங்கையா நாயுடு பேச்சு

நேர்மையின்றி பலர் பணம் சம்பாதிக்கின்றனர், அவர்களுக்கு மோடி சிறைகளை தயார் செய்கிறார் -வெங்கையா நாயுடு பேச்சு
நேர்மையின்றி பலர் பணம் சம்பாதிக்கின்றனர், அவர்களுக்கெல்லாம் மோடி, சிறைகளை தயார் செய்து வருகிறார் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை,

திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி திருக்கோவிலின் பாரம்பரியத்தை அதன் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டது குறித்த நூலை சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி. தாய்மொழியை அனைவரும் மறக்காது இருக்க வேண்டும். எந்த மொழியையும் திணிக்கக் கூடாது, எந்த மொழியையும் எதிர்க்கவும் கூடாது.

இந்து என கூற பலரும் தயங்குவது ஏன்? நாட்டில் 80 விழுக்காடு மக்கள் இந்துக்கள். இளம் தலைமுறையினர் புராதன வரலாற்று சின்னங்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும் முன்வர வேண்டும்.

நாட்டின் கலாச்சாரத்தை இளைஞர்கள் பாதுகாக்க வேண்டும். இந்தியா வளம் நிறைந்த நாடு. வெளிநாட்டு அறிஞர்கள் இந்தியாவின் பெருமையை எழுதி உள்ளனர்.

குழந்தைகளுக்கு நம் புராதனங்கள், இதிகாசங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். வரலாற்றை அறியும் ஆர்வத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.  அனைவரும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். எந்த மொழியையும் கட்டாயப்படுத்தக் கூடாது.

நேர்மையின்றி பலர் பணம் சம்பாதிக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் மோடி, சிறைகளை தயார் செய்து வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘எந்த மொழியையும் திணிக்கக்கூடாது’ புத்தக வெளியீட்டு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கக்கூடாது என்றார்.
2. நவீன சுகாதார வசதிகள் கிராமப்புறங்களுக்கு சென்றடைய அரசின் முயற்சிகளுக்கு தனியார் பங்களிப்பு அவசியம் சென்னையில் மருத்துவமனையை திறந்து வைத்து வெங்கையா நாயுடு பேச்சு
நவீன சுகாதார வசதிகள் கிராமப்புறங்களுக்கு சென்றடைய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தனியார் பங்களிப்பும் அவசியம் என்று சென்னையில் மருத்துவமனையை திறந்து வைத்து வெங்கையா நாயுடு பேசினார்.
3. கல்விமுறை, நம் தலைவர்களை பற்றியும், தியாகங்கள் பற்றியும் மாணவர்களுக்கு சொல்லி தருவதில்லை -வெங்கையா நாயுடு பேச்சு
நடைமுறையில் உள்ள கல்விமுறை, நம் தலைவர்களை பற்றியும், அவர்களின் தியாகங்கள் பற்றியும் மாணவர்களுக்கு சொல்லி தருவதில்லை என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.