தேசிய செய்திகள்

ஐ.நா. உச்சி மாநாட்டில் பங்கேற்க, செப்டம்பர் மாதம் நியூயார்க் செல்கிறார் பிரதமர் மோடி + "||" + PM Narendra Modi likely to visit US in September for UN Summit: American community leaders

ஐ.நா. உச்சி மாநாட்டில் பங்கேற்க, செப்டம்பர் மாதம் நியூயார்க் செல்கிறார் பிரதமர் மோடி

ஐ.நா. உச்சி மாநாட்டில் பங்கேற்க,  செப்டம்பர் மாதம் நியூயார்க் செல்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. உச்சி மாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு செல்கிறார்.
புதுடெல்லி,

செப்டம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் ஹூஸ்டன் நகரங்களுக்கு செல்ல உள்ளார்.

டிரம்ப் நிர்வாகம் அழைப்பு விடுத்ததன் பேரில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திலும் கலந்து கொள்ள உள்ளார். ஐ.நா. பொதுச் சபை கூட்டம் நியூயார்க் நகரில் செப்டம்பர் 20 துவங்கி செப்டம்பர் 23 வரை  நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்திற்கு பிறகு ஹூஸ்டன் செல்லும் மோடி, டெக்சாஸ் நகரைச் சேர்ந்த இந்திய - அமெரிக்க சமூகத்தினரை சந்திக்க உள்ளார். வாஷிங்டன் நகருக்கு மோடி செல்வது இதுவரை இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் ஐ.நா. கூட்டத்தின் ஒரு அங்கமாக அமெரிக்க அதிபர் டிரம்பையும் உலக தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு
வரும் செப்டம்பரில் நடைபெற உள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி 23- ந்தேதி காஞ்சீபுரம் வருகை
அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக வருகிற 23-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலமாக காஞ்சீபுரம் வருகிறார்.
3. வேலைவாய்ப்புகளுக்கும், விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட் -பிரதமர் மோடி பெருமிதம்
மத்திய பட்ஜெட் வேலைவாய்ப்புகளுக்கும், விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
4. நீதிபதிகளை தேநீர் விருந்தில் தேர்ந்தெடுக்கிறார்கள் -மோடிக்கு நீதிபதி ரங்நாத் பாண்டே பரபரப்பு கடிதம்
ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளை நியமிப்பதில் சாதி மற்றும் வம்சத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என பிரதமர் மோடிக்கு நீதிபதி ரங்நாத் பாண்டே கடிதம் எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
5. 2-வது முறையாக பதவியேற்ற பின் முதல் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி
பிரதமராக 2-வது முறையாக பதவியேற்ற பின் முதல் முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.