உலக செய்திகள்

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷிய ஏவுகணைகளை துருக்கி பெறுகிறது + "||" + Turkey receives first S-400 missile delivery from Russia

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷிய ஏவுகணைகளை துருக்கி பெறுகிறது

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷிய ஏவுகணைகளை துருக்கி பெறுகிறது
ரஷிய நாட்டிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தொகுதி பாகங்களை வாங்குவதற்கு துருக்கி முடிவு செய்தது.
இஸ்தான்புல்,

ரஷிய நாட்டிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தொகுதி பாகங்களை வாங்குவதற்கு துருக்கி முடிவு செய்தது. இதை அமெரிக்கா விரும்பவில்லை. எதிர்க்கிறது.

ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தொகுதி பாகங்களை துருக்கி வாங்கினால், அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிப்போம் என அமெரிக்கா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்கு துருக்கி அடி பணியவில்லை. தனது ராணுவ தளவாட கொள்முதல் என்பது இறையாண்மையையொட்டிய விஷயம் என துருக்கி திட்டவட்டமாக கூறி விட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ரஷியா, தனது எஸ்-400 ஏவுகணை தொகுதி பாகங்களை துருக்கிக்கு வினியோகிக்க தொடங்கியது. நேற்று தொடர்ந்து 2-வது நாளாக ரஷியாவின் எஸ்-400 ஏவுகணை தொகுதி பாகங்களை துருக்கி பெற்றுள்ளது.

இது தொடர்பாக துருக்கி ராணுவ அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “முர்டெட் விமானப்படை தளத்துக்கு ரஷியாவின் 4-வது சரக்கு விமானம் வந்து சேர்ந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளது. இதனால் அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.