உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல்; 42 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு + "||" + U.S. Service Member Killed in Action in Afghanistan

ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல்; 42 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல்; 42 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள், ராணுவம் இடையேயான மோதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
காபூல், 

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள், ராணுவம் இடையேயான மோதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் 3 மாகாணங்களில் அவர்களிடையே அடுத்தடுத்து மோதல்கள் நடந்துள்ளன.

ஜாவ்ஜான் மாகாணத்தில் கார்கீன் மாவட்டத்தை தங்கள் வசப்படுத்துவதற்காக தலீபான் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலை மேற்கொண்டனர். ஆனால் ராணுவம் சரியான பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் உள்ளூர் பயங்கரவாத தலைவர்களும் அடங்குவர்.

இதேபோன்று டக்கார் மாகாணத்தில் நமகாப் மாவட்டத்தில் தலீபான்கள் நுழைய முயன்றபோது உள்ளூர்வாசிகளுக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 6 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பால்க் மாகாணத்தில், ராணுவ தளம் ஒன்றில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். ஆனால் ராணுவத்தினர் எதிர் தாக்குதல் நடத்தி அவர்களது முயற்சியை முறியடித்தனர். இதில் 16 தலீபான்கள் உயிரிழந்தனர்.

அடுத்தடுத்து நடந்த தாக்குதல்களில் 42 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பது அந்த இயக்கத்துக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.