மாநில செய்திகள்

போக்குவரத்து கழகங்களில் பணியாளர்களை தேர்வு செய்ய விதிமுறைகளை 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும்தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு + "||" + The rules for selecting employees in transport corporations should be made within 3 months Government of Tamil Nadu, Highcourt order

போக்குவரத்து கழகங்களில் பணியாளர்களை தேர்வு செய்ய விதிமுறைகளை 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும்தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

போக்குவரத்து கழகங்களில் பணியாளர்களை தேர்வு செய்ய விதிமுறைகளை 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும்தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
போக்குவரத்து கழகங்களில் பணியாளர்கள் தேர்வு செய்வதற்காக விதிமுறைகளை 3 மாதங்களில் தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 

திருநெல்வேலியை சேர்ந்தவர் கோவைச்சாமி. மாற்றுத்திறனாளியான இவர் ஐ.டி.ஐ. படித்துள்ளார். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 22 ஆண்டுகளாகியும் இதுவரை வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து போக்குவரத்து கழகத்தில் 248 நாட்கள் பயிற்சி பெற்றுள்ள தனக்கு பணி வழங்க அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ‘போக்குவரத்து கழகங்களில் உரிய முறையில் விளம்பரம் கொடுக்காமல் பணி நியமனங்கள் மேற்கொள்ளபடுகிறது. தேர்வு நடை முறைகள் ஏதும் இல்லை. அரசு பணியாளர் தேர்வாணையம் அல்லது வேறு அமைப்பின் மூலம் எழுத்து தேர்வு நடத்தி பணியாளர்களை இனி தேர்வு செய்ய வேண்டும்’ என்று கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரவு பிறப்பித்தார்.

வெளிப்படைத்தன்மை

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நடத்துனர்கள், ஓட்டுனர்கள், இளநிலை உதவி பொறியாளர்கள் பணியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதிகள் நிர்ணயித்து தேர்வுகள் மேற்கொள்வதாகவும், இவர்களின் கல்வி தகுதி, வயது, அனுபவம் உள்ளிட்ட தகுதிகளை பரிசீலித்து செயல்முறை தேர்வு நடத்திய பிறகே பணிக்கு தேர்வு செய்யப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி ஆஷா ஆகியோர் விசாரித்தனர். ‘அரசு பணி நியமனத்தில் எப்போதுமே வெளிப்படைத்தன்மை பின்பற்ற வேண்டும். விளம்பரங்களை வெளியிட்டு, தகுதியுடைய அனைவரையும் போட்டியிட அனுமதித்து, அவர்களில் சிறந்த பணியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

கொள்கை உருவாக்க வேண்டும்

‘போக்குவரத்து துறையில், பணியாளர்கள் தேர்விற்கு உரிய நடைமுறையை உருவாக்க ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவிட்டும், அந்த நடைமுறைகளை ஏற்படுத்த இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. எனவே, போக்குவரத்து துறை பணியாளர்கள் தேர்விற்கு 3 மாதங்களில் தனி தேர்வு கொள்கைகளை, விதிமுறைகளை உருவாக்க வேண்டும்’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஒரு மாதத்தில் சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஒரு மாதத்தில் சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...