மாநில செய்திகள்

அவல நிலையில் அரசு பஸ்: ‘கியர்’ கம்பிக்கு பதிலாக மரக்குச்சியை நுழைத்து இயக்கிய டிரைவர் + "||" + The plight of the bus

அவல நிலையில் அரசு பஸ்: ‘கியர்’ கம்பிக்கு பதிலாக மரக்குச்சியை நுழைத்து இயக்கிய டிரைவர்

அவல நிலையில் அரசு பஸ்: ‘கியர்’ கம்பிக்கு பதிலாக மரக்குச்சியை நுழைத்து இயக்கிய டிரைவர்
மதுரை மேலூர் பகுதியில் இயக்கப்படும் பல அரசு பஸ்கள் ஓட்டை, உடைசல்களாகவே உள்ளன.
மதுரை, 

மதுரை மேலூர் பகுதியில் இயக்கப்படும் பல அரசு பஸ்கள் ஓட்டை, உடைசல்களாகவே உள்ளன. மேலூரில் இருந்து சேக்கிபட்டிக்கு செல்லும் டவுன் பஸ்சின் நிலை மோசமாக உள்ளது. அதன் மேற்கூரை பலத்த சேதம் அடைந்து உள்ளது. கியர் போடுவதற்கான இரும்பு கம்பி உடைந்து போய்விட்டது. இதனால் மரக்குச்சியை நுழைத்து கயிற்றால் கட்டி வைத்து அந்த பஸ் ஆபத்தான முறையில் இயக்கப்படுகிறது. பஸ் செல்லும் போது மரக்குச்சி கழன்று விழாமல் இருக்க ஒரு பயணி அந்த குச்சியை பிடித்துக்கொண்டு செல்வதும் நடக்கிறதாம்.

அவல நிலையில் உள்ள அரசு பஸ்களால் அதில் பயணிக்கும் மக்களுக்கும் அச்சத்துடனே உள்ளனர். எனவே இதுபோன்ற பஸ்களை மாற்றிவிட்டு புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.