தேசிய செய்திகள்

போலீஸ் காவலில் வாலிபர் தற்கொலை: டி.ஜி.பி.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் + "||" + In police custody Youth Suicide For DGP Human Rights Commission Notices

போலீஸ் காவலில் வாலிபர் தற்கொலை: டி.ஜி.பி.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

போலீஸ் காவலில் வாலிபர் தற்கொலை: டி.ஜி.பி.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
போலீஸ் காவலில் வாலிபர் தற்கொலை: டி.ஜி.பி.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி,

கடலூர் மாவட்டத்தில் ஏ.டி.எம். கார்டுகளை திருடி பணம் எடுத்ததாக 24 வயது வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கழிவறை ஜன்னலில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.


இந்த செய்தியை பார்த்த தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதுதொடர்பாக தமிழக டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், “போலீசாரின் அஜாக்கிரதையால் அவர்கள் காவலில் இருந்த குற்றவாளி உயிரை இழந்துள்ளார். இதுகுறித்து 6 வாரங்களில் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.