உலக செய்திகள்

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 பேர் உயிரிழப்பு + "||" + 43 people killed in floods and landslides in Nepal

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது.  வீடுகள் மற்றும் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால் பல நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.  பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத சூழ்நிலையும் எழுந்துள்ளது.  வெள்ளம் ஒருபுறம் இருக்க, ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.

இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களை மீட்டு பாதுகாப்பு நிறைந்த இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

நேபாளத்தில் இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர்.  24 பேரை காணவில்லை.  20 பேர் காயமடைந்து உள்ளனர் என அந்நாட்டு போலீசார் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி...
நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 90-ஐ எட்டி உள்ளது.
2. அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 39 பேர் பலி
அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 39 பேர் பலியாகி உள்ளனர்.
3. நேபாளத்தில் வெள்ளம்; 88 பேர் பலி
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 88 பேர் பலியாகி உள்ளனர்.
4. பீகாரில் வெள்ளத்திற்கு 25 பேர் பலி; 25 லட்சம் பேர் பாதிப்பு: முதல் மந்திரி அறிவிப்பு
பீகாரில் வெள்ளத்திற்கு 25 பேர் பலியாகி உள்ளனர் என முதல் மந்திரி நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.
5. கனமழைக்கு 67 பேர் பலி; சர்வதேச அமைப்பின் உதவியை கோரியது நேபாளம்
நேபாளத்தில் கனமழையால் 67 பேர் பலியான நிலையில் சர்வதேச அமைப்புகளின் உதவியை அந்நாட்டு அரசு கோரியுள்ளது.