மாநில செய்திகள்

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் தொடங்கியது + "||" + The Nellaiappar Temple Therottam began

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் தொடங்கியது

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் தொடங்கியது
நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது.
நெல்லை,

வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா ஒவ்வோராண்டும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், வீதி உலா வருதல், கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. 8ம் திருநாளான நேற்று காலை 7.30 மணிக்கு நடராஜர் வெள்ளை சாத்தியும், 8.30 மணிக்கு பச்சை சாத்தியும் வீதி உலா வருதல் நடந்தது. மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா வருதல், இரவு 10 மணிக்கு சுவாமியும், அம்பாளும் தேர்களை பார்வையிடும் நிகழ்ச்சி, சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்ககிளி வாகனத்திலும் வீதி உலா வருதல் நடந்தது.

இந்நிலையில், நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் இன்று காலை தொடங்கியது.  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை காண சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் வருகை தந்துள்ளனர்.  நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் சரவணன் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதுதவிர 4 ரதவீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு தேரோட்ட நிகழ்ச்சிகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழிநெடுகிலும் ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: காந்திமதி அம்பாள் செப்பு தேரில் வீதி உலா
நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு காந்திமதி அம்பாள் செப்பு தேரில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடந்தது.
2. திம்மாச்சிபுரம் கனகதோணி அம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
திம்மாச்சிபுரம் கனகதோணி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
3. நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
4. மெலட்டூர் தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர்
மெலட்டூரில் உள்ள தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
5. நெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - திரளான பக்தர்கள் பங்கேற்பு
நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.