கிரிக்கெட்

உலக கோப்பை இறுதிப்போட்டி : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு + "||" + World Cup Finalist New Zealand won the toss and elected to bat

உலக கோப்பை இறுதிப்போட்டி : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு

உலக கோப்பை இறுதிப்போட்டி : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு
உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
லண்டன், 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

‘நம்பர் ஒன்’ அணியான இங்கிலாந்து அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை விரட்டியடித்து மிகுந்த நம்பிக்கையுடன் 27 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்து இருக்கிறது. 1979, 1987, 1992–ம் ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு இறுதி சுற்று ஏமாற்றத்தில் முடிந்தாலும் இந்த முறை இங்கிலாந்துக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

பழக்கப்பட்ட சீதோஷ்ண நிலை, உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு என்று சாதிப்பதற்கு இதை விட சிறந்த தருணம் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்துக்கு கிட்டாது. அத்துடன் லீக் சுற்றில் 119 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை புரட்டியெடுத்தது இங்கிலாந்தின் உத்வேகத்துக்கு தீனி போடுவதாக அமைந்துள்ளது.

கணிக்க முடியாத ஒரு அணியான நியூசிலாந்து இறுதிப்போட்டி வரும் என்று பெரும்பாலானவர்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. லீக் சுற்றில் 5 வெற்றிகளுடன் தட்டுத்தடுமாறி அரைஇறுதியை எட்டிய நியூசிலாந்து அணி, அடுத்து முன்னாள் சாம்பியன் இந்தியாவை அரைஇறுதியோடு விரட்டியடித்தது.

2015–ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் ‘சரண்’ அடைந்த நியூசிலாந்து அணியினர் இந்த முறை தவறுக்கு இடம் கொடுக்காமல் முதல்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்குவதற்காக எல்லா வகையிலும் முனைப்பு காட்டுவார்கள்.

ஏறக்குறைய ஒரே பலத்துடன் இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாகை சூடும் அணி உலக கோப்பையை ருசித்த அணிகளின் பட்டியலில் 6–வது அணியாக இணையும்.

44 ஆண்டு கால உலக கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...