தேசிய செய்திகள்

சமாஜ்வாடி கட்சி தலைவர் சுட்டுக்கொலை + "||" + Samajwadi Party leader shot dead

சமாஜ்வாடி கட்சி தலைவர் சுட்டுக்கொலை

சமாஜ்வாடி கட்சி தலைவர் சுட்டுக்கொலை
உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டம் கனக்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அகிலேஷ் யாதவ் (வயது 30). இவர் சமாஜ்வாடி கட்சி இளைஞரணி பகுதி தலைவராக இருந்தார். அவர் நேற்று மாலை வீட்டு அருகே உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது சிலர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். படுகாயமடைந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


ஒரு போக்குவரத்து நிறுவனம் தொடர்பாக அவருக்கும், ஆதித்யா சிங் என்பவருக்கும் தகராறு இருந்து வந்தது. இதில் ஆதித்யா சிங் கூட்டாளிகளுடன் சேர்ந்து அகிலேஷ் யாதவை சுட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, இதுபோன்ற கொலை சம்பவங்கள் அதிகரித்துவிட்டது என்று யோகி ஆதித்யநாத் அரசு மீது குற்றம்சாட்டினார்.


தொடர்புடைய செய்திகள்

1. குடும்பத்தினர் 5 பேரை சுட்டுக்கொன்ற வாலிபர் தானும் தற்கொலை
பஞ்சாப்பில், குடும்பத்தினர் 5 பேரை சுட்டுக்கொன்ற வாலிபர் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
2. போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை - பயங்கரவாதிகள் வெறிச்செயல்
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
3. உத்தரபிரதேசத்தில் பட அதிபர் சுட்டுக்கொலை
உத்தரபிரதேசத்தில் பட அதிபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
4. காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
5. ஆஸ்திரேலிய பெண் சுட்டுக்கொலை: அமெரிக்க போலீஸ் அதிகாரிக்கு 12½ ஆண்டு சிறை
ஆஸ்திரேலிய பெண் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், அமெரிக்க போலீஸ் அதிகாரிக்கு 12½ ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.