உலக செய்திகள்

ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு செல்லும் இந்தியர்களுக்கு உடனடி விசா + "||" + When Indians can get visa on arrival in UAE

ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு செல்லும் இந்தியர்களுக்கு உடனடி விசா

ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு செல்லும் இந்தியர்களுக்கு உடனடி விசா
இந்திய பாஸ்போர்ட் மற்றும் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் விசாவுடன் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு செல்லும் இந்தியர்களுக்கு உடனடியாக விசா வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவும், ஐக்கிய அரபு எமிரேட்டும் நட்பு நாடுகளாக உள்ளன. இந்நிலையில், இருநாடுகளின் உறவை வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு உடனடியாக விசா வழங்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு விசிட் விசாவில் செல்வோர் நுழைவுக் கட்டணமாக ஆயிரத்து 874 ரூபாயும், 375 ரூபாய் சேவை கட்டணமும் செலுத்த வேண்டும்.

அதிகபட்சமாக 14 நாட்கள் தங்குவதற்கு மற்றும் ஒருமுறை காலநீட்டிப்பு செய்வதற்கான புதுப்பிப்பு கட்டணமாக 4 ஆயிரத்து 687 ரூபாயும், சேவைக் கட்டணமாக 375 ரூபாயும் செலுத்த வேண்டும். விசிட் விசாவை ஒருமுறை புதுப்பிக்கும் பயணிகள், கூடுதலாக 28 நாட்கள் தங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாஸ்போர்ட் மற்றும் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் விசா வைத்திருப்போர் ஐக்கிய அரபு எமிரேட்டின் உடனடி விசிட் விசா பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ப.சிதம்பரம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் - டெல்லி ஐகோர்ட்டில் கபில்சிபல் வாதம்
அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது விசாரணை நடந்தது. அப்போது அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் என அவர் தரப்பில் ஆஜரான வக்கீல் கபில் சிபில் கூறினார்.
2. போலி ஆவணங்கள் மூலம், இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட் எடுத்து கொடுத்த டிராவல்ஸ் உரிமையாளர் கைது - கியூ பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை
போலி ஆவணங்கள் மூலம் இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட் எடுத்து கொடுத்த டிராவல்ஸ் உரிமையாளரை கியூ பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்து உள்ளனர்.
3. ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டைக்கு பதிலாக அனைத்துக்கும் ஒரே அடையாள அட்டை - உள்துறை மந்திரி அமித்ஷா யோசனை
ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற வற்றுக்கு பதிலாக ஒரே அடையாள அட்டை வழங்கும் யோசனையை உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்து உள்ளார்.