மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி + "||" + Palanisamy was the new district in Tamil Nadu, declaring Tenkasi and Chengalpattu

தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக தென்காசி, செங்கல்பட்டை முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.
சென்னை

நெல்லையில் இருந்து தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி தென்காசி மக்கள்  நீண்ட கால கோரிக்கை  வைத்து வருகின்றனர். இதனை நிறைவேற்றும் வகையில்  தமிழக சட்டசபையில் தென்காசியை தனி மாவட்டமாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  அறிவிப்பார் என தகவல் வெளியாகி இருந்தது. 

 தமிழகத்தின் 34ஆவது மாவட்டமாக தென்காசி உதயமாக உள்ளது. தென்காசி மாவட்டத்தின் கீழ் சிவகிரி, அம்பாசமுத்திரம், கடையநல்லூர், செங்கோட்டை ஆகிய வட்டாரங்கள் வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதே போல் சட்டசபையில் 110 வது  விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி   தமிழகத்தில்  புதிதாக தென்காசி, செங்கல்பட்டு என 2 மாவட்டங்கள்  உருவாக்கப்படும் என கூறினார். நெல்லையில் இருந்து தென்காசியை பிரித்து தனி மாவட்டமாக உருவாக்கப்படும். காஞ்சீபுரத்தில் இருந்து செங்கல்பட்டை பிரித்து  புதுமாவட்டமாக உருவாக்கப்படும் என கூறினார்.

இதை தொடர்ந்து தமிழகத்தின் மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 100 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவி தொகை தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்-ல் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
2. 2023-க்குள் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக்கப்படும் - ஓ.பன்னீர்செல்வம்
2023-ஆம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
3. அரசு ஊழியர்கள் பண்டிகை கால முன் பணம் ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்வு- ஓ.பன்னீர்செல்வம்
அரசு ஊழியர்கள் பண்டிகை கால முன் பணம் ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.
4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி
காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
5. மறைமுகமாக ஆட்சியை பிடிக்க நினைத்தீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை திமுக மீது முதல்வர் பழனிசாமி குற்றசாட்டு
மறைமுகமாக ஆட்சியை பிடிக்க நினைத்தீர்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை என திமுக மீது முதல்வர் பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.