உலக செய்திகள்

ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவில் தீ விபத்து 12 பேர் பலி + "||" + At least 12 presumed dead in Japan studio fire: Official

ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவில் தீ விபத்து 12 பேர் பலி

ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவில் தீ விபத்து 12 பேர் பலி
ஜப்பான் நாட்டிலுள்ள அனிமேஷன் ஸ்டூடியோ ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
ஜப்பானின் க்யோட்டோ, நகரிலுள்ள அனிமேஷன் ஸ்டூடியோவில் தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் வானளாவிய உயரத்துக்கு புகை எழுந்திருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என க்யோட்டோ நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தீவிபத்து ஏற்பட்ட பகுதியில் எரிபொருள் போன்ற திரவத்தை ஊற்றியதாக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீ விபத்தில் சிக்கி 35க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மேலும் தீவிபத்து ஏற்பட்ட 3 அடுக்குகள் கொண்ட கட்டிடத்துக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. ஜப்பானின் ஹோன்சு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் ஹோன்சு தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
2. ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்: சிந்து, ஸ்ரீகாந்த் பங்கேற்பு
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, வீரர் ஸ்ரீகாந்த் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
3. ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவில் பயங்கர தீ; பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு: நாசவேலை காரணமா?
ஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவில் தீப்பிடித்ததில் 33 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். இதற்கு நாசவேலை காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
4. ஜப்பானில் அனிமேஷன் நிறுவனத்திற்கு தீ வைப்பு, 24 பேர் உயிரிழப்பு
ஜப்பானில் அனிமேஷன் நிறுவனத்திற்கு தீ வைக்கப்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 12-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.
5. ஜி 20 மாநாட்டுக்கு இடையே டொனால்டு டிரம்ப்- பிரதமர் மோடி சந்திப்பு
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.