தேசிய செய்திகள்

வெள்ளத்திற்கு மத்தியில் படகில் கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது, கிருஷ்ணா என பெயர் சூட்டப்பட்டது + "||" + Assam Woman Delivers Baby On Boat During Floods Names Him Krishna

வெள்ளத்திற்கு மத்தியில் படகில் கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது, கிருஷ்ணா என பெயர் சூட்டப்பட்டது

வெள்ளத்திற்கு மத்தியில் படகில் கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது, கிருஷ்ணா என பெயர் சூட்டப்பட்டது
அசாமில் வெள்ளத்திற்கு மத்தியில் படகில் கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது, குழந்தைக்கு கிருஷ்ணா என பெயரிடப்பட்டுள்ளது.
அசாமில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக 57 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் படகு மூலம் மீட்கப்பட்டு பத்திரமான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திங்கள் கிழமை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் போது 24 வயது கர்ப்பிணி ருமி பதாரிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது சுகாதாரத்துறை ஊழியர்கள் உதவியுடன் அவர் படகில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியிலேயே அவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இந்து கடவுள் கிருஷ்ணா என பெயரிட்டுள்ளதாக ருமி கூறியுள்ளார். தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வடமாநிலங்களில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு 18 பேர் உயிரிழப்பு
இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
2. கேரளாவில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 111 ஆக உயர்வு - 31 பேரை காணவில்லை
கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்தது. மேலும் 31 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் காவிரியில் கரைகளை தொட்டுச்செல்லும் வெள்ளம்
மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் காவிரியில் கரைகளை தொட்டு வெள்ளம் செல்கிறது.
4. கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்
கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
5. கர்நாடகத்தில் கனமழை-வெள்ளத்துக்கு சாவு எண்ணிக்கை 42 ஆக உயர்வு
கர்நாடகத்தில் கனமழை-வெள்ளத்துக்கு சாவு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. மழை நின்றாலும் வெள்ளம் வடியாததால் மக்களின் இயல்புவாழ்க்கை அடியோடு முடங்கி போய் உள்ளது.