உலக செய்திகள்

ஈரான் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது: டிரம்ப் தகவல் + "||" + US shoots down Iranian drone: Trump

ஈரான் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது: டிரம்ப் தகவல்

ஈரான் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது: டிரம்ப்  தகவல்
ஈரான் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 வாஷிங்டன்,

ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த இரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமையன்று ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பலுக்கு மிக அருகே, அதாவது 1000 யார்டுகள் வரை நெருங்கி அச்சுறுத்தும் வகையில் இரானின் ஆளில்லா விமானம் பறந்து வந்தது. எச்சரிக்கையை புறக்கணித்து ஈரான் விமானம் வந்ததால் அமெரிக்க தரப்பு தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் டிரம்ப் தெரிவித்தார்.   

தங்கள் வீரர்களையும், தங்கள் நாட்டு நலன்களையும் தற்காத்துக்கொள்ளும் உரிமை அமெரிக்காவுக்கு இருப்பதாக கூறிய டிரம்ப், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் சர்வதேச வர்த்தகத்துக்கு இடையூறாக செயல்படும் ஈரானுக்கு அனைத்து நட்பு நாடுகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

தனது ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் செய்தி குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை என்று இரான் கூறியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. ஈரானில் திருமண விழாவில் 11 பேர் பரிதாப சாவு - 30 பேர் படுகாயம்
ஈரானில் திருமண விழாவில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. ஈரான் அணு சக்தி ஒப்பந்தம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரும் 18-ந் தேதி கூடி விவாதம்
ஈரான் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரும் 18-ந் தேதி கூடி விவாதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3. ஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் - 208 பேர் கொல்லப்பட்டதாக ‘அம்னெஸ்டி’ தகவல்
ஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கடந்த மாதம் நடந்த போராட்டத்தில் 208 பேர் கொல்லப்பட்டதாக ‘அம்னெஸ்டி’ தெரிவித்துள்ளது.
4. அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்
இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள 13 கடற்படை துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.