சினிமா செய்திகள்

கடாரம் கொண்டான் படத்தை விக்ரம் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார் + "||" + kadaram kondan Vikram enjoyed watching with fans

கடாரம் கொண்டான் படத்தை விக்ரம் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார்

கடாரம் கொண்டான் படத்தை விக்ரம் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார்
கடாரம் கொண்டான் படத்தை விக்ரம் தனது மகன் துருவ் உடன் இணைந்து சென்னை காசி திரையரங்கிற்கு சென்று முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசித்தார்.
சென்னை

‘தூங்காவனம்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கியிருக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’. இதில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக கமல் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், அவரது இளைய மகள் அக்‌ஷரா ஹாசனும், நாசரின் மகன் அபி ஹசனும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரீநிவாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு, பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். படத்திற்கு இசை ஜிப்ரன். இதனை ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது

 ‘கடாரம் கொண்டான்’ இன்று வெளியாகியுள்ளது.  இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படத்தின் புரோமோஷனுக்காக விக்ரம் பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். இப்படத்தின் அதிரடியான சண்டைக் காட்சிகள் மேக்கிங் வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், இன்று வெளியான இப்படத்தை பார்ப்பதற்கு விக்ரம் தனது மகன் துருவ் உடன் இணைந்து சென்னை காசி திரையரங்கிற்கு சென்று முதல் நாள் முதல் காட்சி பார்த்து மகிழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. சமூக வலைதளங்களில் மனைவி பிகினி புகைப்படத்தை பார்த்து விராட் கோலி அடித்த கமெண்ட்
மனைவி பிகினி புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டதை பார்த்த விராட் கோலி முதல் ஆளாக கமெண்ட் போட்டுள்ளார்.
2. மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசாந்த்
கடும் போட்டிக்கு இடையே 'அந்தாதுன்' இந்தி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றினார் தியாகராஜன்.
3. இந்தியையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் -நடிகை சுஹாசினி
பள்ளிகளில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகமானதால் தான் தமிழ் மொழியை கற்பது குறைந்துள்ளது என்று நடிகை சுஹாசினி பேசியுள்ளார்.
4. சிறந்த நடிகைக்கான தேசிய விருது கீர்த்தி சுரேஷிற்கு வழங்கப்பட்டுள்ளது ; தேசிய விருது முழு விவரம்
சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநடியில் நடித்ததற்காக ’கீர்த்தி சுரேஷிற்கு’ வழங்கப்பட்டுள்ளது.
5. தல காய்ச்சல் : அஜித் படம் பார்க்க, விடுமுறை கேட்ட நடிகர்
அஜித் திரைப்படம் நாளை இந்தியாவில் வெளியாகும் நிலையில், தமக்கு படப்பிடிப்பில் இருந்து விடுமுறை வழங்குமாறு தயாரிப்பாளரிடம் நடிகர் சிரிஷ் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.