தேசிய செய்திகள்

சுதந்திர தின உரைக்கு மக்கள் தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தலாம் - பிரதமர் மோடி அழைப்பு + "||" + "Let Your Thoughts Be Heard": PM Invites Suggestions For August 15 Speech

சுதந்திர தின உரைக்கு மக்கள் தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தலாம் - பிரதமர் மோடி அழைப்பு

சுதந்திர தின உரைக்கு மக்கள் தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தலாம் - பிரதமர் மோடி அழைப்பு
வரும் சுதந்திர தின உரைக்கு பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்தலாம் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுடெல்லி,

2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையை 6-வது முறையாக வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி நிகழ்த்த உள்ளார். 

அந்த உரையில் 130 கோடி இந்தியர்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

எனவே மக்கள் தனது சுதந்திர தின உரையில் இடம் பெற வேண்டிய கருத்துக்கள் குறித்து நமோ ஆப்பில் பரிந்துரைக்கலாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.