சினிமா செய்திகள்

நாட்டில் நல்ல கருத்துகளை பேச சுதந்திரமில்லை; இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் வருத்தம் + "||" + The country is not free to speak good ideas; Director S.A. Chandrasekhar regrets

நாட்டில் நல்ல கருத்துகளை பேச சுதந்திரமில்லை; இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் வருத்தம்

நாட்டில் நல்ல கருத்துகளை பேச சுதந்திரமில்லை; இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் வருத்தம்
நாட்டில் நல்ல கருத்துகளை பேச சுதந்திரமில்லை என இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் வருத்தமுடன் கூறினார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.  இதில் வாக்களித்து விட்டு வந்த நடிகர் மற்றும் இயக்குனரான எஸ்.ஏ. சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவரிடம், தேசிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  நடிகர் சூர்யா சமீபத்தில் புதிய தேசிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்தார். இதனால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் ஆபத்து உள்ளது என்றும் எச்சரித்தார். பஸ் வசதி இல்லாத கிராம மாணவர்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று படிப்பதில் சிரமங்கள் ஏற்படும் என்றும், படிப்பை அவர்கள் பாதியில் நிறுத்திவிடும் நிலைமை இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

அத்துடன் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார். கிராமப்புறங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் வசதிகள் குறைவாக உள்ளன. ஆசிரியர் பற்றாக்குறையும் இருக்கிறது. இதனால் கல்வி தரம் நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக இல்லை. இதுபோன்ற குறைபாடுகளை களையாமல் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளில் அரசு கவனம் செலுத்துவதாகவும் கண்டித்தார்.

வெளிநாட்டில் 8வது வகுப்பு வரை தேர்வுகளே கிடையாது என்பதையும் சுட்டிக்காட்டினார். புதிய கல்வி கொள்கையை எதிர்க்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சமூக அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினார். சூர்யா பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்தன.

இந்த நிலையில் சூர்யா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய கல்வி கொள்கையால் மாணவர்கள் தரம் மேம்படும் என்றும் வலைத்தளத்தில் சிலர் தெரிவித்துள்ளனர். சூர்யாவின் பேச்சுகள் வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என்று பா.ஜனதா பிரமுகர் எச்.ராஜா கண்டித்துள்ளார்.  அரசியல் கட்சியினர் சிலரும் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவரது இந்த பேச்சு பற்றி பதிலளித்த இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், சுதந்திர நாட்டில் இருக்கிறோம்.  ஆனால் நல்ல கருத்துகளை பேச முடியவில்லை.  இது பலருக்கும் நடக்கிறது.  தற்போது நடிகர் சூர்யாவிற்கு நடந்துள்ளது என வருத்தமுடன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற தேர்தலின்போது ஈரோடு மக்களை விட்டு சென்றது தவறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வருத்தம்
நாடாளுமன்ற தேர்தலின்போது ஈரோடு மக்களை விட்டு சென்றது தவறு என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வருத்தம் தெரிவித்து உள்ளார்.
2. எம்.ஜி.ஆருடன் நடிக்காதது வருத்தம் - கமல்ஹாசன்
எம்.ஜி.ஆருடன் நடிக்காதது வருத்தமளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
3. புகைப்பிடிக்கும் ‘போஸ்டர்’ - வருத்தம் தெரிவித்த சந்தானம்
தனது புகைப்பிடிக்கும் போஸ்டர் வெளியானது தொடர்பாக, நடிகர் சந்தானம் வருத்தம் தெரிவித்தார்.