மாநில செய்திகள்

பொறியியல் கலந்தாய்வு: தமிழகத்தில் 35 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை + "||" + Engineering consultation: Not a single student is enrolled in 35 engineering colleges in Tamil Nadu

பொறியியல் கலந்தாய்வு: தமிழகத்தில் 35 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை

பொறியியல் கலந்தாய்வு: தமிழகத்தில் 35 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை
பொறியியல் கலந்தாய்வின் மூன்று சுற்றுக் கலந்தாய்வுகள் நிறைவு பெற்றன. தமிழகத்தில் 35 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.
சென்னை

பொறியியல் கலந்தாய்வின் மூன்று சுற்றுக் கலந்தாய்வுகள் நிறைவு பெற்றன. மூன்று சுற்றுக் கலந்தாய்வின் முடிவில் அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி, சேலம் கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி, சிவகங்கையில் உள்ள சிக்ரி ஆகிய 3 கல்லூரிகளின் 100 சதவிகித இடங்களும் நிரம்பி உள்ளன. 8 கல்லூரிகளில் 99 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பியுள்ளன.

10 கல்லூரிகளில் 90 முதல் 98 சதவிகித இடங்கள் நிரம்பியுள்ளன. 12 கல்லூரிகளில் 80 முதல் 89 சதவிகித இடங்கள் நிரம்பியுள்ளன. 23 கல்லூரிகளில் 60 முதல் 79 சதவிகித வரையிலான இடங்கள் நிரம்பியுள்ளன. 35 கல்லூரிகளில் ஒரு இடம் கூட இதுவரை நிரம்பவில்லை. 115 கல்லூரிகளில் 5 சதவிகிதத்திற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.15 கல்லூரிகளில் ஒரே ஒரு  மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளனர். 80 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

மொத்தமுள்ள 1 லட்சத்து 72 ஆயிரத்து 940 இடங்களில் 26 சதவிகிதமான 45 ஆயிரத்து 662 இடங்கள் நிரம்பியுள்ளன. 37 ஆயிரத்து 598 மாணவர்கள் 4ஆவது மற்றும் இறுதி சுற்றுக் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 479 பொறியியல் கல்லூரிகளில், 1 லட்சத்து 67 ஆயிரத்து 101 இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கலந்தாய்வு மூலம் சேரும் மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை -தமிழக உயர் கல்வித் துறை
பொறியியல் படிப்பில் கலந்தாய்வு வழியாக சேரும் மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
2. தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான 2-வது கட்ட கலந்தாய்வு 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்
பெரம்பலூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான 2-வது கட்ட கலந்தாய்விற்கு வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
3. குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் 3-ம் கட்ட கலந்தாய்வு 18-ந்தேதி நடக்கிறது
குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் 3-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 18-ந்தேதி நடக்கிறது.