உலக செய்திகள்

பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் வைத்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலி + "||" + Two killed, 25 injured as blast hits SW Pakistan

பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் வைத்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலி

பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் வைத்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலி
பாகிஸ்தானில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வைத்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ்தானில் குவெட்டா நகரில் கிழக்கு பைபாஸ் சாலையில் மருந்து கடை ஒன்று உள்ளது.  இதன் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு அடையாளம் தெரியாத நபர்களால் இயக்கப்பட்டு நள்ளிரவில் திடீரென வெடித்து சிதறியது.

பொதுமக்களை இலக்காக வைத்து நடந்த இந்த வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.  25 பேர் காயமடைந்தனர்.  அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  சிகிச்சையை தொடர்ந்து அவர்களது நிலை சீராக உள்ளது.  நள்ளிரவில் திடீரென நடந்த இந்த தாக்குதலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் இந்த சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்போ அல்லது தனிநபரோ பொறுப்பேற்கவில்லை.  ஆனால் கடந்த காலங்களில் பலூச் தேசியவாத ஊடுருவல்காரர்கள் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்டு உள்ளனர்.  நீண்டகால ராணுவ நடவடிக்கைகள் மற்றும் தேசிய அதிரடி திட்டம் ஆகியவற்றால் குவெட்டா நகரில் தீவிரவாத செயல்கள் பெருமளவில் குறைந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. விருத்தாசலம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்; வாலிபர் பலி - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; என்ஜினீயர் பலி
மோட்டார் சைக்கிள் - லாரி மோதியதில் என்ஜினீயர் பலியானார்.
3. கூடலூரில், மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி சாவு - மற்றொருவர் படுகாயம்
கூடலூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
4. ஆறுமுகநேரி அருகே விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற 2 மாணவர்கள் பரிதாப சாவு
ஆறுமுகநேரி அருகே தசரா விழாவுக்கு மாலை அணிய சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
5. பட்டுக்கோட்டை அருகே, மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஆசிரியர் சாவு
பட்டுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஆசிரியர் பலியானார். காயமடைந்த மற்றொரு ஆசிரியர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் பரிதாபமாக இறந்தார். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-