மாநில செய்திகள்

புதிய கல்விக் கொள்கை: சூர்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பா.ஜனதாவுக்கு நாடாளுமன்றத்தில் மதுரை எம்.பி. கேள்வி + "||" + Madurai MP Venkatesan backs Suriya over draft national education policy in parliament

புதிய கல்விக் கொள்கை: சூர்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பா.ஜனதாவுக்கு நாடாளுமன்றத்தில் மதுரை எம்.பி. கேள்வி

புதிய கல்விக் கொள்கை: சூர்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பா.ஜனதாவுக்கு நாடாளுமன்றத்தில் மதுரை எம்.பி. கேள்வி
புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் கருத்து தெரிவித்த சூர்யாவிற்கு எதிராக பா.ஜனதாவினர் பேசும் விவகாரத்தை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.
மத்திய அரசின் புதிய தேசியக் கல்வி கொள்கையை ஆரம்பம் முதலே கவனத்தில் கொண்டு வரும் சூர்யா, அதுதொடர்பாக படித்து பொதுமக்கள் தங்களுடைய கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கையை விடுத்துவந்தார். புதிய கல்விக்கொள்கை தொடர்பாக பெரும் விழிப்புணர்வு ஏற்படாத நிலையிலும் இதுதொடர்பான கோரிக்கையை அவருடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனையடுத்து அகரம் அறக்கட்டளை நிகழ்ச்சியில் பேசும்போது, அதிலிருக்கும் குளறுபடிகளை வெளிப்படையாக பட்டியலிட்டார். விமர்சனங்களையும் ஸ்திரமாக முன்வைத்தார். சமமான கல்வியை வழங்காமல் எப்படி ஒரே நுழைவுத் தேர்வு என்ற ஆணித்தரமான கேள்வியையும், நகர்ப்புறத்திற்கும், கிராமப்புறத்திற்கும் இடையில் இப்போது நிலவும் நீண்ட இடைவெளியையும் பட்டியலிட்டார். அவருடைய பேச்சுக்கு ஆதரவு எழுந்த நிலையில் பா.ஜனதாவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். 

கருத்து தெரிவிக்க கேட்டுக்கொண்ட சூர்யாவை வன்முறையை தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டினார் எச்.ராஜா. பா.ஜனதா தலைவர்கள் அவரை விமர்சனம் செய்தனர். அமைச்சர்களும் எதிரான கருத்துக்களை தெரிவித்தனர். மத்திய அரசு கருத்துக்களை கோரியது, அவருடைய கருத்தை தெரிவித்து, பிறரையும் கருத்துக்களை தவறாமல் தெரிவிக்க வேண்டும் என்று சூர்யா விழிப்புணர்வை கொடுத்தார். இவ்விவகாரத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளார் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன். இதில் மத்திய அரசின் நிலைபாடு என்ன? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். 

கல்விக் கொள்கை தொடர்பான நடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரித்து பேசிய சு. வெங்கடேசன், புதிய கல்விக் கொள்கையின் மீது மக்கள் கருத்து கூறலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் சூர்யா கருத்து கூறியதற்கு பா.ஜனதா தலைவர்கள் கண்டனம், எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். மிரட்டுகிறார்கள். கல்விக் கொள்கை தொடர்பாக அரசு கருத்துக் கேட்கும் நிலையில், பா.ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? புதிய கல்விக் கொள்கை மீது கருத்து கூற வேண்டுமா? அல்லது ஆதரவு கூற வேண்டுமா? என்ற கேள்விகளை எழுப்பினார். 

தொடர்புடைய செய்திகள்

1. படமாகும் குறுநாவலில், சூர்யா!
சூர்யா நடித்த ‘சூரரை போற்று’ படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. இதையடுத்து சூர்யா நடிக்கப்போகும் படம் எது, அந்த படத்தை இயக்கப் போகிறவர் யார்? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்தன. இந்த கேள்விகளுக்கு இப்போது விடை கிடைத்து இருக்கிறது.
2. 8 வழிச்சாலை திட்ட வழக்கு: மத்திய அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு
8 வழிச்சாலை திட்ட வழக்கு தொடர்பாக, மத்திய அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவினை பிறப்பித்தது.
3. ரசிகர்களை கவர்ந்த சூர்யா பட டிரெய்லர்
சூர்யா, சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இது அவருக்கு 38-வது படம். கதாநாயகியாக அபர்ணா முரளி வருகிறார். இறுதி சுற்று படத்தை எடுத்து பிரபலமான சுதா கொங்கரா இயக்கி உள்ளார்.
4. ‘நித்யானந்தா பற்றி எந்த தகவலும் இல்லை’ ஈகுவடாரில் இருந்து வெளியேறிவிட்டார் - மத்திய அரசு தகவல்
இந்தியாவை விட்டு வெளியேறி உள்ள நித்யானந்தா சாமியார் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.
5. உத்தர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் இணைய சேவை முடக்கம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

அதிகம் வாசிக்கப்பட்டவை