தேசிய செய்திகள்

அமைதியை குலைக்கவும், கோபத்தை ஏற்படுத்தவும் இந்து கடவுள் ராமரின் பெயரை பயன்படுத்தாதீர்கள் -கெலாட் + "||" + Don t use Lord Rams name to create unrest and anger Gehlot

அமைதியை குலைக்கவும், கோபத்தை ஏற்படுத்தவும் இந்து கடவுள் ராமரின் பெயரை பயன்படுத்தாதீர்கள் -கெலாட்

அமைதியை குலைக்கவும், கோபத்தை ஏற்படுத்தவும் இந்து கடவுள் ராமரின் பெயரை பயன்படுத்தாதீர்கள் -கெலாட்
அமைதியை குலைக்கவும், கோபத்தை ஏற்படுத்தவும் இந்து கடவுள் ராமரின் பெயரை பயன்படுத்தாதீர்கள் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.
பசுவின் பெயரிலும், ஸ்ரீராம ஜெயம் சொல்லக்கூறியும் கும்பல் தாக்குதல் சம்பவமும், உயிரிழப்பும் இந்தியா முழுவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தும் மாற்றம் காணப்படவில்லை. இந்நிலையில் அமைதியை சீர்குலைக்கவும், கோபத்தை ஏற்படுத்தவும் இந்து கடவுள் ராமரின் பெயரை பயன்படுத்தாதீர்கள் என ராஜஸ்தான் மாநில முதலவர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவிற்கு பதிலளித்து பேசிய அசோக் கெலாட், கடவுள் இந்திரன் நம்மை வாழ்த்துகிறார். உங்களால் இதனை சொல்ல முடியாது, அவர் உங்களுக்கு (பா.ஜனதா) சொந்தமானவர் கிடையாது. நீங்கள் ஸ்ரீராம ஜெயத்திற்கு சொந்தம் கொண்டாடுகிறீர்கள்.  அதனை நானும் முழங்கினேன், நான் கோஷமிட்டபோது இங்கு அனைவரும் மகிழ்ந்தோம்.  அவரை நீங்கள் சொந்தமாக்க தொடங்குவது  துரதிர்ஷ்டவசமானது.  மக்கள் மத்தியில் அமைதியின்மையையும் கோபத்தையும் உருவாக்கும் வகையில் கோஷத்தையும் ஒருவர் எடுத்துக் கொண்டால் அது நல்லதல்ல, துரதிர்ஷ்டவசமானது எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதா, சிவசேனா தலைவர்கள் காங்கிரசில் சேர விருப்பம் - மாணிக்ராவ் தாக்கரே சொல்கிறார்
பா.ஜனதா, சிவசேனா கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்து உள்ளனர் என மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே கூறியுள்ளார்.
2. பா.ஜனதாவின் 100 நாள் ஆட்சியில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் - பிரதமர் மோடி பேச்சு
பாரதீய ஜனதாவின் 100 நாள் ஆட்சியில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
3. பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ்.காரர்களை கவர்னராக நியமிக்கிறார்கள் - நாராயணசாமி குற்றச்சாட்டு
பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.காரர்களை கவர்னராக நியமிக்கிறார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
4. துணை முதல்-மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி: பா.ஜனதா மூத்த தலைவர்கள் போர்க்கொடி - எடியூரப்பாவுக்கு நெருக்கடி முற்றுகிறது
எடியூரப்பாவின் மந்திரிசபை விரிவாக்கத்தை தொடர்ந்து மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதோடு 3 துணை முதல்-மந்திரி பதவிகளும் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் எம்.எல்.ஏ.க்களாக உள்ள பா.ஜனதாவை சேர்ந்த மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். அதோடு அவர்களது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். இதனால் எடியூரப்பாவுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
5. பா.ஜனதா- சிவசேனா கட்சியினர் அறிவிப்புகளை வெளியிடுவதில் கில்லாடிகள் காங்கிரஸ் தலைவர் கிண்டல்
ஆளும் பா.ஜனதா- சிவசேனா கட்சியினர் அறிவிப்புகளை வெளியிடுவதில் கில்லாடிகள் என காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட் கிண்டலாக கூறினார்.