மாநில செய்திகள்

அரசு அறிவித்தபடி தமிழகத்தில் ‘மருத்துவமனை தினம்’ இன்று கொண்டாட்டம் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு + "||" + Hospital Day in Tamil Nadu Today is the celebration

அரசு அறிவித்தபடி தமிழகத்தில் ‘மருத்துவமனை தினம்’ இன்று கொண்டாட்டம் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

அரசு அறிவித்தபடி தமிழகத்தில் ‘மருத்துவமனை தினம்’ இன்று கொண்டாட்டம் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
அரசு அறிவித்தபடி தமிழகத்தில் இன்று ‘மருத்துவமனை தினம்’ கொண்டாடப்படுகிறது. சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1886-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ந்தேதி நாராயணசாமி-சந்திரம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகளாக பிறந்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இந்தியாவின் முதல் பெண் டாக்டரான இவரது பிறந்த நாள், மருத்துவமனை தினமாக கொண்டாடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கடந்த 16-ந்தேதி சட்டசபையில் அறிவித்தார்.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முதல் முறையாக இன்று (செவ்வாய்க்கிழமை) மருத்துவமனை தினம் கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த தினத்தை கொண்டாடுவதற்கு அரசு சார்பில் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் மருத்துவமனைகளில் செயல்பாடுகள், சாதனைகள், மற்றும் சிறப்புகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவமனை தினம் கொண்டாடப்பட உள்ளது.

மேலும் மருத்துவமனையின் சாதனைகள் மற்றும் அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து இன்று சிறப்பு கண்காட்சியும், மருத்துவமனைகளில் வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பயனாளிகள் தெரிவிக்கவும், மருத்துவமனை ஊழியர்கள் தங்களது பணிகள் குறித்து தெரிவிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு உதவும் சமூக அமைப்புகளை பாராட்டவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னையில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளான ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை, எழும்பூர் கண் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளின் சாதனை குறித்த விளக்க கண்காட்சி அந்தந்த மருத்துவமனைகளில் அமைக்கப்பட உள்ளது.

மேலும் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து அந்தந்த துறை மருத்துவர்கள் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தவும் மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மொழிப்போராட்டத்துக்கான களத்தை அமைக்க வேண்டாம்: ரெயில்வே வாரியத்துக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
தமிழ் மொழியை தொடர்ந்து புறக்கணிக்கும் நடவடிக்கைகளால், ரெயில்வே வாரியம் தமிழகத்தில் மொழிப் போராட்டத்துக்கான களத்தை அமைத்துத்தர வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்து உள்ளார்.
2. தமிழகத்தில் ‘ஆன்லைன்’ மூலம் சினிமா டிக்கெட் விற்பனை: திரையுலகினருடன் அமைச்சர் ஆலோசனை கட்டணத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் விற்பனை செய்வது குறித்து திரைப்பட துறையினருடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனை நடத்தினார்.
3. தமிழகத்தில் எந்த இடத்திலும் ரேஷன் பொருட்கள் பெறும் திட்டம்: விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார் என்று - அமைச்சர் காமராஜ் தகவல்
தமிழகத்தில் எந்த இடத்திலும் ரேஷன் பொருட்கள் பெறும் திட்டத்தை விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
4. தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி - லண்டன் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
நோயாளிகளுக்கு குறித்த நேரத்தில் சிகிச்சை அளிக்க, தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும் என லண்டன் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
5. தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க நடவடிக்கை-டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.