தேசிய செய்திகள்

உ.பி.யில் கன்வர் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் மது அருந்துவதாக வீடியோ வெளியானது + "||" + Watch A video of alleged kanwariyas drinking on the bank of the Ganges in UP goes viral

உ.பி.யில் கன்வர் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் மது அருந்துவதாக வீடியோ வெளியானது

உ.பி.யில் கன்வர் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் மது அருந்துவதாக  வீடியோ வெளியானது
உ.பி.யில் கன்வர் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் மது அருந்துவதாக வீடியோ வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மற்றும் அதனுடைய அண்டைய மாநிலத்தை சேர்ந்த  சிவ பக்தர்கள் கன்வர் யாத்ரா என்ற பெயரில் பாபா தாமில் உள்ள பைத்யாநாத் ஜோதிர்லிங் கோவிலுக்கு யாத்திரை செல்வது வழக்கமாக உள்ளது. அப்படி செல்பவர்களை கன்வாரியாஸ் என்று அழைப்பார்கள். உ.பி.யில் இப்போது இந்த புனித யாத்திரை நடந்து வருகிறது. இந்நிலையில் கன்வர் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் சிலர் மது அருந்துவதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கங்கை கரையின் ஓரத்தில் இளைஞர்கள் மேலாடை அணியாமல் பைக்கை சுற்றி நின்று மது அருந்தும் காட்சி வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இது, அவ்வழியாக சென்றவர்களால் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இப்போது அவை வைரலாக பரவி வருகிறது.

இதற்கிடையே ஹாபூர் மாவட்ட ஏஎஸ்பி சர்வேஸ் மிஸ்ரா பேசுகையில், “தடை செய்யப்பட்ட இடத்தில் சிலர் மது அருந்தும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இது சட்டவிரோதமாகும். அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என தெரிவித்துள்ளார்.