தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு : இரண்டு ராணுவ வீரர்கள் காயம் + "||" + Shopian: 2 soldiers injured in encounter with terrorists

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு : இரண்டு ராணுவ வீரர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு : இரண்டு ராணுவ வீரர்கள் காயம்
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
சோபியன்,

ஜம்மு-காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் உள்ள பந்தோஷன் கிராமத்தில் இன்று அதிகாலை தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த இரண்டு ராணுவ வீரர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ராணுவ வீரர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். முன்னதாக கன்சல்வான் கிராமத்தில் ஜூலை 31 ஆம் தேதி இரண்டு தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.