கிரிக்கெட்

கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்கு + "||" + Last 20 Over Cricket: 147 runs Target for Indian team

கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்கு

கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்கு
வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கயானா,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 22 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.


இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கயானாவில் உள்ள புரோவிடென்ஸ் ஸ்டேடியத்தில் இன்று நடந்து வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி வெஸ்ட்இண்டீஸ் அணியின் சார்பாக இவின் லீவிஸ் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் சுனில் நரைன் 2(6) ரன்னிலும், இவின் லீவிஸ் 10(11) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஹெட்மயர் 1(3) ரன்னிலும், நிகோலஸ் பூரன் 17(23) ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்ததாக கிரான் பொல்லார்டுடன், ராவ்மேன் பவெல் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பொல்லார்டு தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 58(45) ரன்களில் போல்ட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய பிரித்வெயிட் 10(7) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் ராவ்மேன் பவெல் 32(20 ரன்களும், பெபியன் ஆலன் 8(5) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளும், நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளும், ராகுல் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.