மாநில செய்திகள்

சுஷ்மா சுவராஜ் மறைவு ; மு.க.ஸ்டாலின் இரங்கல் + "||" + M.K.Stalin's condolences for late Sushma swaraj

சுஷ்மா சுவராஜ் மறைவு ; மு.க.ஸ்டாலின் இரங்கல்

சுஷ்மா சுவராஜ் மறைவு ; மு.க.ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் மத்திய-மந்திரி சுஷ்மா சுவராஜ் மறைவிற்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,

முன்னாள் மத்திய-மந்திரி சுஷ்மா சுவராஜ் (67) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை மாரடைப்பால் காலமானார். 

சுஷ்மா சுவராஜ்  மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

”முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும்,பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி தலைவருமான திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர் சுஷ்மா சுவராஜ் என பதிவிட்டுள்ளார். 

மேலும், அவர் கூறியதாவது:-

”அவர் தீடீர் மறைவினால் துயரத்தில் வாடும் குடும்பத்தினர்,  நண்பர்கள்,  பாரதிய ஜனதா கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்”. என டுவிட் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. சுற்றுலாவுக்காக முதல்வர் வெளிநாடு செல்லவில்லை, முதலீட்டாளர்களை சந்திக்கவே -அமைச்சர் உதயகுமார்
சுற்றுலாவுக்காக முதல்வர் வெளிநாடு செல்லவில்லை, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக உலக முதலீட்டாளர்களை சந்திக்கவே வெளிநாடு செல்கிறார் என அமைச்சர் உதயகுமார் கூறினார்.
2. சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு கவர்னர் கிரண்பெடி இரங்கல்
சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு கவர்னர் கிரண்பெடி இரங்கல் தெரிவித்தார்.
3. முழு அரசு மரியாதையுடன் சுஷ்மா சுவராஜ் உடல் தகனம் - ஜனாதிபதி, பிரதமர் இறுதி அஞ்சலி
முழு அரசு மரியாதையுடன் சுஷ்மா சுவராஜ் உடல் தகனம் செய்யப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
4. சுஷ்மா சுவராஜ் எனக்கு 2–வது தாய் மும்பை வாலிபர் உருக்கம்
பாக். சிறையில் இருந்து சுஷ்மா சுவராஜ் என்னை மீட்டார். எனக்கு 2–வது தாய் என மும்பை வாலிபர் உருக்கமாக கூறியுள்ளார்.
5. சுஷ்மா சுவராஜ் மறைவு மிகவும் கவலையளிக்கிறது - ஜப்பான் தூதர்
சுஷ்மா சுவராஜ் மறைவு மிகவும் கவலையளிக்கிறது என ஜப்பான் தூதர் கூறியுள்ளார்.