தேசிய செய்திகள்

“நமக்கு அமைந்ததைப் போன்ற அண்டை நாடு வேறு யாருக்கும் அமைந்து விடக் கூடாது”-ராஜ்நாத் சிங் விமர்சனம் + "||" + Hope no one gets a neighbour like ours: Rajnath Singh jabs Pakistan

“நமக்கு அமைந்ததைப் போன்ற அண்டை நாடு வேறு யாருக்கும் அமைந்து விடக் கூடாது”-ராஜ்நாத் சிங் விமர்சனம்

“நமக்கு அமைந்ததைப் போன்ற அண்டை நாடு வேறு யாருக்கும் அமைந்து விடக் கூடாது”-ராஜ்நாத் சிங் விமர்சனம்
நமக்கு அமைந்ததைப் போன்ற அண்டை நாடு வேறு யாருக்கும் அமைந்து விடக் கூடாது என இறைவனை வேண்டிக் கொள்வதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக ரீதியிலான தொடர்புகளை  முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.

இது குறித்துப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “தனது அண்டை நாட்டை மாற்றிக்கொள்ளும் சலுகை எந்த ஒரு நாட்டுக்கும் கிடையாது” என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியதை நினைவு கூர்ந்தார். மேலும், “ நமது அண்டை நாடு தான் நமக்கு இருக்கும் மிகப் பெரிய கவலை. நண்பர்களை நாம் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அருகில் வசிப்பவர்களை நாம் மாற்றிக் கொள்ள முடியாது. நமக்கு அமைந்ததை போன்ற அண்டை நாடு வேறு யாருக்கும் அமைந்து விடக் கூடாது என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை
இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் வீரர்களிடம் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
2. பாகிஸ்தான், பயங்கரவாதத்தை தூண்டுகிறது ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு
பாகிஸ்தான், பயங்கரவாதத்தை தூண்டுகிறது என்று ஐ.நா.வில் இந்தியா கடுமையாக சாடியது.
3. மாஸ்கோவில் காந்தி சிலைக்கு ராஜ்நாத் சிங் மரியாதை
மாஸ்கோவில் உள்ள காந்தி சிலைக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
4. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பாக்.மதத்தலைவருடன் இம்ரான்கான் அரசு பேச்சுவார்த்தை
பாகிஸ்தானில் இம்ரான்கான் பதவி விலக வலியுறுத்தி 5-வது நாளாக மவுலானா பஸ்லுர் ரெஹ்மான் தலைமையிலான குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
5. நாங்கள் பாகிஸ்தான் முழுவதையும் ஸ்தம்பிக்க வைப்போம் -மவுலான பஸ்லூர் ரெஹ்மான்
நாங்கள் பாகிஸ்தான் முழுவதையும் ஸ்தம்பிக்க வைப்போம் என மதகுரு மவுலான பஸ்லூர் ரெஹ்மான் கூறி உள்ளார்.