தேசிய செய்திகள்

சாங்கிலி, கோலாப்பூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ராணுவம் மீட்பு பணியில் தீவிரம் + "||" + Army ground rescuing people in Kolhapur, Sangli and Raigad areas

சாங்கிலி, கோலாப்பூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ராணுவம் மீட்பு பணியில் தீவிரம்

சாங்கிலி, கோலாப்பூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ராணுவம் மீட்பு பணியில் தீவிரம்
சாங்கிலி, கோலாப்பூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ராணுவம் மீட்பு பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
மராட்டியத்தின் மேற்கு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கோலாப்பூர் மற்றும் சாங்கிலி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சார வசதி இன்றி தவித்து வருகின்றனர். இருமாவட்டங்களிலும், ராய்காட் மாவட்டத்திலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்களை மீட்கும் பணியில் ராணுவம் தீவிரமாக இறங்கியுள்ளது. 10 படைப்பிரிவுகளை கொண்ட ராணுவப்படை மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.