மாவட்ட செய்திகள்

சேலத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.2 லட்சம் மோசடி - 3 பேர் கைது + "||" + In Salem Claiming to buy work abroad Rs 2 lakh fraud for farmer - 3 arrested

சேலத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.2 லட்சம் மோசடி - 3 பேர் கைது

சேலத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.2 லட்சம் மோசடி - 3 பேர் கைது
சேலத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சூரமங்கலம்,

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா(வயது 54), விவசாயி. இவருடைய மகன் பிரபாகரன். இவர் பி.இ. படித்துள்ளார். ராஜாவுக்கு தனது நண்பர்கள் மூலம் சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த காந்தி கண்ணன்(41) என்பவர் அறிமுகமானார்.


அப்போது அவர் ராஜாவிடம் அவருடைய மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய அவர் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே வைத்து காந்தி கண்ணனிடம் ரூ.2 லட்சம் கொடுத்தார். இதையடுத்து காந்தி கண்ணன் வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.

இந்த மோசடி குறித்து ராஜா சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ராஜாவிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த காந்தி கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக காடையாம்பட்டியை சேர்ந்த கருணாநிதி(63), ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன்(61) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருமானூர் அருகே, இயற்கை எரிவாயு திட்டத்தின் மூலம் வருவாய் ஈட்டி வரும் விவசாயி
திருமானூர் அருகே இயற்கை எரிவாயு திட்டத்தின் மூலம் விவசாயி ஒருவர் வருவாய் ஈட்டி வருகிறார்.
2. குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: சேலத்தில் சட்ட நகலை கிழித்து தி.மு.க.வினர் போராட்டம் - 75 பேர் கைது
குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் சட்ட நகலை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. சேலத்தில் பிரபல திருடன் கைது: ரூ.5 லட்சம் பொருட்கள் மீட்பு
சேலத்தில் கைதான பிரபல திருடனிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன. மேலும் முருகன் சிலையை ஆய்வுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4. மழையால் விளைச்சல் பாதிப்பு: சேலம் பூ மார்க்கெட்டில் குண்டுமல்லி விலை உயர்வு கிலோ ரூ.1,500-க்கு விற்பனை
சேலம் பூ மார்க்கெட்டில் குண்டுமல்லிவிலை உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
5. குரங்குகளை விரட்ட நாய்க்கு புலி வேஷமிட்ட பலே விவசாயி
கர்நாடகாவில் தொல்லை கொடுத்து வந்த குரங்குகளை விரட்டுவதற்கு தனது வளர்ப்பு நாய்க்கு விவசாயி ஒருவர் புலி வேஷமிட்டு அச்சுறுத்தியுள்ளார்.