மாநில செய்திகள்

வரலாற்றில் 65வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது + "||" + For the 65th time in history, the Mettur Dam reached 100 feet

வரலாற்றில் 65வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது

வரலாற்றில் 65வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது
வரலாற்றில் 65வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.

மேட்டூர்,

கர்நாடகத்தின் குடகு மாவட்டத்திலும், கேரளாவின் வயநாடு பகுதியிலும் தொடர்ந்து பெய்த பலத்த மழையின் காரணமாக மைசூரு அருகே உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கும் மற்றும் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக அந்த அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததால், அவற்றில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது.


இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை எட்டியது. இதன் மூலம் 65-வது முறையாக 100 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 2 லட்சத்து பத்தாயிரம் கன அடியாக உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அணையை திறந்து வைக்கிறார். இதற்காக நேற்று மாலை 6.10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற அவர், பின்னர் அங்கிருந்து சேலம் சென்றார். சேலத்தில் இருந்து இன்று மேட்டூர் சென்று காலை 8.30 மணிக்கு அணையை திறந்து வைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. வரலாற்றிலேயே முதல் முறையாக ஜம்மு உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதத்தை நெருங்கிய வாக்குப்பதிவு
ஜம்மு மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வரலாற்றிலேயே முதல் முறையாக 99.5 சதவீத வாக்குகள் பதிவாகின.
2. வரலாற்றில் முதல் முறையாக 21-ந் தேதி விண்வெளியில் தனியாக நடக்கப்போகும் வீராங்கனைகள்
வரலாற்றில் முதல் முறையாக வரும் 21-ந் தேதி விண்வெளியில் இரு வீராங்கனைகள் தனியாக நடக்க உள்ளனர்.
3. வரலாற்றில் ஒரு கரும்புள்ளி: இந்தியாவின் தலையை வெட்டி விட்டார்கள் - குலாம்நபி ஆசாத் ஆவேசம்
இந்தியாவின் தலையாக உள்ள காஷ்மீரை வெட்டி விட்டார்கள் என்று குலாம்நபி ஆசாத் கூறினார்.