மாநில செய்திகள்

காவிரி ஆற்றில் மேலும் 3 தடுப்பணைகள் கட்டப்படும் : முதல் அமைச்சர் பழனிசாமி + "||" + Godavari-Cauvery link project soon: EPS

காவிரி ஆற்றில் மேலும் 3 தடுப்பணைகள் கட்டப்படும் : முதல் அமைச்சர் பழனிசாமி

காவிரி ஆற்றில் மேலும் 3 தடுப்பணைகள் கட்டப்படும் :  முதல் அமைச்சர் பழனிசாமி
காவிரி- கோதாவரி இணைப்புத திட்டத்தை இந்த அரசு நிறைவேற்றும்; அதனால் கூடுதல் நீர் கிடைக்கும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி பேசினார்.
சேலம்,

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்த பின் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:-   

விவசாயிகளின் நன்மைக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .  20 மாவட்ட மக்களில் குடிநீர் ஆதாரமாக மேட்டூர் அணை தண்ணீர் உள்ளது.  அதிமுக ஆட்சியில் தான் மேட்டூர் அணை தூர்வாரப்பட்டது.  மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசு அதிமுக அரசு.  வருகின்ற நீரை பொறுத்து தேவைக்கேற்ப படியப்படியாக தண்ணீ திறப்பு அதிகரிக்கப்படும்.  ஏழுமலையான் அருளால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது.

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 14 ஆயிரம் ஏரிகளும் உள்ளாட்சிகளுக்கு சொந்தமான 39 ஆயிரம் குட்டைகளும் தூர்வாரப்படும். மேட்டூர் அணையில் கிழக்கு மேற்கு கால்வாய்களில் 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.

காவிரியில் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 3 தடுப்பணைகள் கட்டப்படும். காவிரி- கோதாவரி இணைப்புத திட்டத்தை இந்த அரசு நிறைவேற்றும்; அதனால் கூடுதல் நீர் கிடைக்கும்.   மேட்டூர் அணை நீரால் என்னுடைய நிலமும் பாசனம் பெறுவதால் மகிழ்ச்சி.  விவசாயிகளுக்கு போதுமான விதை. நெல், உரம் போன்றவை இருப்பு வைக்கப்பட்டு உரிய நேரத்தில் வழங்கப்படும்.சேலம் மாவட்டத்தில் ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா அமைக்கப்படும். ” இவ்வாறு அவர் பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் பருவமழை பாதிப்புகள் பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை
தமிழகத்தில் பருவமழை பாதிப்புகள் பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.
2. வாகன தணிக்கையின்போது காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் -முதலமைச்சர் பழனிசாமி
வாகன தணிக்கையின்போது காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
3. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல் அமைச்சர் பழனிசாமி சந்திப்பு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி வருகிறார்.
4. அரசை குறை கூறுவதையே மு.க.ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார்; முதல் அமைச்சர் குற்றச்சாட்டு
அரசை குறை கூறுவதையே மு.க.ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார் என்று முதல் அமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
5. சுஜித் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சமும், அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்படும் - முதல் அமைச்சர் பழனிசாமி
சுஜித் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சமும், அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.