தேசிய செய்திகள்

நிதின் கட்காரி பயணம் செய்ய இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு + "||" + Delhi-Bound Indigo Flight Fails To Take Off, Nitin Gadkari Among Fliers

நிதின் கட்காரி பயணம் செய்ய இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

நிதின் கட்காரி பயணம் செய்ய இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
நிதின் கட்காரி பயணம் செய்ய இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது தெரியவந்ததையடுத்து விமானத்தின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது.
நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உள்பட ஏராளமான பயணிகள் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், விமானத்தில் தீவிர தொழில்நுட்ப கோளாறு இருந்ததை விமானி கண்டறிந்தார்.

இதையடுத்து, உடனடியாக விமானம் ஓடுபாதையில் இருந்து, விமானம்  நிறுத்தப்படும் டாக்ஸிவேவுக்கு கொண்டு வரப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர். உரிய நேரத்தில் விமானி தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்ததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் - கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி
நைஜீரியா விமான நிலையத்தில், புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி அடைந்தனர்.
2. கனமழையால் ஓடுதளத்தில் இருந்து விலகி ஓடிய விமானம்; பயணிகள் உயிர் தப்பினர்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு மும்பை நோக்கி ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று வந்தது. அதில் 167 பயணிகள் இருந்தனர்.
3. கோவா விமானம் தாமதம் : நடிகை நக்மா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
மும்பை விமான நிலையத்தில் இருந்து கோவா செல்லும் ஏர் இந்தியா விமானம் காலை 9 மணி அளவில் வழக்கம் போல் புறப்பட்டு செல்லும்.
4. ஓடும் விமானத்தில் அவசரகால வழியை திறந்த பெண் பயணி
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு ‘பிகே 702’ என்ற பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.
5. மாயமான விமானத்தில் பயணம் செய்த ஒரு வீரர் அடையாளம் காணப்பட்டார்
மாயமான விமானத்தில் பயணித்தவர்களில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த வீரர் ஒருவரின் அடையாளம் தெரிந்தது.