தேசிய செய்திகள்

காஷ்மீரில், பாதுகாப்பு பணியில் முக்கிய பங்காற்றிய இரண்டு பெண் அதிகாரிகள் + "||" + 2 women officers play key roles in Srinagar

காஷ்மீரில், பாதுகாப்பு பணியில் முக்கிய பங்காற்றிய இரண்டு பெண் அதிகாரிகள்

காஷ்மீரில், பாதுகாப்பு பணியில் முக்கிய பங்காற்றிய இரண்டு பெண் அதிகாரிகள்
காஷ்மீரில், பாதுகாப்பு பணியில் முக்கிய பங்காற்றிய இரண்டு பெண் அதிகாரிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஸ்ரீநகர், 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு 4 நாட்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் தகவல்தொடர்பு இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரியான சயித் செஹ்ரிஸ் அஸ்கர் என்பவர் நியமிக்கப்பட்டார்.

மருத்துவராக இருந்து ஐஏஎஸ் அதிகாரியான இவர், ஸ்ரீநகரை சேர்ந்தவர்கள் தொலைதூரத்தில் உள்ள தங்களது உறவினர்களுடன் பொதுதொலைபேசிகள் மூலம் தொடர்புகொள்ள உதவி செய்துள்ளார். தொலைபேசி, இணையதள  சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அஸ்கர் செய்த உதவி பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.

இதேபோல், சண்டிகரை சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியான நித்யா என்பவர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். தால் ஏரி, ஆளுநர் மாளிகை, முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த இடங்களின் பாதுகாப்பை இவர் கையாண்டார். சவாலான நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளான அஸ்கர், நித்யா ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் விவகாரம்: திமுக தலைமையில் டெல்லியில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம்
ஜம்மு-காஷ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி திமுக தலைமையில் டெல்லி ஜந்தர்மந்தரில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2. காஷ்மீர் விவகாரத்தினை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை; கார்த்தி சிதம்பரம்
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் பற்றிய விவகாரத்தினை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு உள்ளார் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
3. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு வங்காளதேசம் ஆதரவு
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு வங்காளதேசம் ஆதரவு தெரிவித்துள்ளது.
4. காஷ்மீர் விவகாரம்: மத்தியஸ்தம் செய்யத் தயார்; மீண்டும் அதிபர் டிரம்ப் பிடிவாதம்
பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாடுகளின் இடையே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.
5. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது என பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.