தேசிய செய்திகள்

மத்திய அரசு உடனடியாக 10 ஆயிரம் கோடி விடுவிக்க வேண்டும்: கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் + "||" + ‘Release Rs 10,000 crore immediately’: Yeddy requests Centre for relief

மத்திய அரசு உடனடியாக 10 ஆயிரம் கோடி விடுவிக்க வேண்டும்: கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்

மத்திய அரசு உடனடியாக 10 ஆயிரம் கோடி விடுவிக்க வேண்டும்: கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்
மத்திய அரசு உடனடியாக 10 ஆயிரம் கோடி விடுவிக்க வேண்டும் என்று கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்தார்.
பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் கடந்த 1-ம் தேதி முதல் பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழையால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பிவிட்டன.

அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.  மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர்  எடியூரப்பா நேரில் சென்று பார்வையிட்டு, மக்களுக்கான நிவாரணப் பணிகளை முடுக்கி விடுகிறார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தும் குறைகளை  கேட்டறிகிறார்.

தீர்த்தஹள்ளி தாலுகா ஹெகலாட்டியில் நிலச்சரிவு ஏற்பட்டு, சுமார் 40  ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அழிந்துபோனதையும் அவர் பார்வையிட்டார்.

இதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா, சிவ்கோமா மாவட்டத்தில் உள்ள உள்ளூர் எம்.எல்.ஏக்களை இன்று நான் சந்தித்து நிலவரம் குறித்து ஆலோசிக்க உள்ளேன். வெள்ளத்தால் 50 ஆயிரம் கோடிக்கும் மேல்  சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக மத்திய அரசு  உடனடியாக 10 ஆயிரம் கோடியை விடுவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 307 ரன்னில் ஆல்-அவுட்
ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடகாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 307 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
2. ஆட்சியை தக்கவைக்கிறார் எடியூரப்பா; 15 தொகுதி இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் பா.ஜனதா முன்னிலை
ஆட்சியை தக்கவைக்கிறார் எடியூரப்பா. 15 தொகுதி இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் பா.ஜனதா முன்னிலையில் உள்ளது.
3. கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா?
கர்நாடகத்தில் 15 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
4. கர்நாடகாவில் எடியூரப்பா அரசு தப்புமா? 15 தொகுதி இடைத்தேர்தல் -இன்று ஓட்டு எண்ணிக்கை
கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று (திங்கட் கிழமை) எண்ணப்படுகிறது.
5. கர்நாடகா: 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் - நாளை வாக்குகள் எண்ணிக்கை
கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன.