தேசிய செய்திகள்

ஜூலை மாதத்தில் வாகன விற்பனை 31 சதவீதம் சரிவு + "||" + Passenger Vehicle Sales Slump 31% In July

ஜூலை மாதத்தில் வாகன விற்பனை 31 சதவீதம் சரிவு

ஜூலை மாதத்தில் வாகன விற்பனை 31 சதவீதம் சரிவு
ஜூலை மாதத்தில் வாகன விற்பனை 31 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
மும்பை,

ஜூலை மாதத்தில் உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை 30.9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.  ஆட்டோ மொபைல் துறை கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

இதனால், மிகப்பெரும் வேலையிழப்பு அபாயத்தை அந்தத்துறை எதிர் நோக்கியுள்ள நிலையில், வாகன விற்பனை 9 மாதங்களாக தொடர்ந்து சரிவில் இருப்பதாக வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் 2,00,790  பயணிகள் வாகனம் விற்பனையாகி இருப்பதாகவும், ஜூலை மாதத்தில், பயணிகள் வாகனத்தின் தயாரிப்பு  17 சதவீதம்  குறைக்கப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.