தேசிய செய்திகள்

சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் அமித்ஷா தேசியக் கொடியேற்றுகிறார்? + "||" + Independence Day: Amit Shah may unfurl national flag from Srinagar's Lal Chowk

சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் அமித்ஷா தேசியக் கொடியேற்றுகிறார்?

சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் அமித்ஷா தேசியக் கொடியேற்றுகிறார்?
சுதந்திர தினத்தின்போது ஸ்ரீநகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசியக்கொடி ஏற்றுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.
ஸ்ரீநகர்,

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் நடவடிக்கைகளுக்கு மாநிலத்தில் பரவலாக கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு ஊரடங்கு, தொலைதொடர்பு சேவைகள் துண்டிப்பு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுதந்திர தினத்தன்று காஷ்மீர் பிராந்தியத்தின் ஸ்ரீநகரில் உள்ள லால்சவுக் பகுதியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசியக்கொடி ஏற்றுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

எனினும், ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைமையகம் இந்த தகவலை உறுதி செய்யவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் நிலவுவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக  அமித்ஷாவின் பயணம் முன்கூட்டியே தெரிவிக்கப்படாது என்றும் பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. தார் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை இந்தியாவும் ரத்து செய்தது
ஜோத்பூர் - கராச்சி இடையிலான தார் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை இந்தியாவும் ரத்து செய்துள்ளது.
2. பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை பாகிஸ்தானுக்கு ரஷ்யா அறிவுறுத்தல்
இந்தியாவுடனான பிரச்சினையை இருதரப்பும் பேசி தீர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று பாகிஸ்தானை ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது.
3. வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு
இரு மொழிக்கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
4. சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல் அமைச்சர் பழனிசாமி தேசியக்கொடி ஏற்றினார் .
5. டேவிஸ் கோப்பை டென்னிசில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளின் ஆட்டம் நடைபெறுமா?
டேவிஸ் கோப்பை டென்னிசில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளின் ஆட்டம் நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.